குழந்தைகளை விதவிதமாக புகைப்படம் எடுக்க பெற்றோர் ஆர்வம்காட்டுவது சகஜம். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. ஒரு நபர், தன் மகன்களை சிங்கத்தின் மேல் வலுக்கட்டாயமாக உட்கார வைத்து புகைப்படம் எடுக்க சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகி, மிருக வதை மற்றும் பொறுப்பற்ற பெற்றோர் குறித்து பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த குழந்தையை கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தின் முதுகில் தூக்கி உட்கார வைக்க முதலில் அந்த தந்தை முயற்சிக்கிறார். குழந்தை பயத்தில் சத்தமாக அழுது, விலக முயன்றபோதிலும், அந்த மனிதர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில், இவரது செயல்கள் சிங்கத்தையும் கோபப்படுத்துவது போல தோன்றவே, பார்வையாளர்களிடையே பதற்றம் அதிகரித்தது.
சிங்கம் தாக்குவதற்கு தயாராக இருப்பது போல தெரிந்ததும் மட்டுமே, அந்த நபர் குழந்தையை அவசரமாக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்கிறார். நல்லவேளையாக, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுவாக தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாவலர்களாகவும், முன்மாதிரிகளாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்த வீடியோ தந்தையின் பொறுப்பற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்கி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரி வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியானதும் கமெண்ட் பிரிவில் ஏராளமான எதிர்வினை கருத்துக்கள் குவிந்தன. பலர் இவ்வளவு சின்னக் குழந்தையுடன் ஆபத்தான முறையில் நடந்துகொண்டதற்காக அந்த மனிதரை கடுமையாக விமர்சித்தனர். வேறு சிலரோ, விலங்குகளை கூண்டில் அடைத்து மனிதர்களின் பொழுதுபோக்குக்கு பயன்படுத்துவது குறித்தும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர்.
ஒரு பயனர், சைக்கோ பெற்றோர்கள்” என்று கொதித்து போனார். மற்றொருவர், “எவ்வளவு கொடூரம்! சிங்கம் காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டும். வெறும் ஒரு புகைப்பட வாய்ப்புக்காக அதை பயன்படுத்தக் கூடாது. பாவமான குழந்தைக்கும் இது தேவையில்லை,” என்று வேதனை தெரிவித்தார்.
இன்னொருவர், “இந்த வீடியோ, இந்த மனிதர் ஒரு நல்ல பெற்றோர் அல்ல என்பதையும், குழந்தையை பராமரிக்கும் திறமை அற்றவர் என்பதையும் காட்டுகிறது. அவர் தனது குழந்தையை ஆபத்தில் தள்ளினார். குழந்தை பாதுகாப்பு சேவைகள் இதில் தலையிட்டு குழந்தையை அவரிடமிருந்து பிரிக்க வேண்டும் என நான் நம்புகிறேன்,” என்று பதிவிட்டார்.
ஆனால் ஒரு சிலர் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர். கண்டிப்பாக அந்த தந்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த பின்னர் தான் குழந்தையை சிங்கத்தின் மீது உட்கார வைத்திருப்பார் என்றும் இந்த புகைப்படம் அந்த குழந்தை பெரியவன் ஆனதும் மறக்க முடியாத ஒரு புகைப்படம் ஆக அந்த சிறுவனின் வாழ்க்கையில் இருக்கும் என்றும் அது சிலர் பதிவு செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DKeYrNhtLEE/?utm_source=ig_web_copy_link