13 பெண் நாய்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொடூரங்களை வீடியோவாக பதிவு செய்ததோடு, அவற்றை “ஆன்லைன் பார்வையாளர்கள்” அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகம் X-ல் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளது. ஒரு வீடியோவில், அந்த நபர் ஒரு நாய்க்கு பாலியல் வலியுறுத்தல் செய்கிறார் போல காட்சி காணப்படுகிறது. பின்னணியில் ஒரு குரல் இந்தி மொழியில் கூறுகிறது. அந்த வீடியோவில் குற்றவாளியின் அந்தரங்க உறுப்புகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
‘எத்தனை நாய்களுடன் உறவு கொண்டாய் என மக்கள் கேட்டபோது, நௌஷாத், கோபமடைந்து மரியாதையின்றி பேசியதால் மக்கள் அவரை தர்ம அடி கொடுத்து விலங்கு உரிமை பாதுகாப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார். அவரின் உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் “எத்தனை நாய்களுக்கு நீ இப்படி செய்தாய்?” என்ற விலங்குகள் பாதுகாப்பாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்கின்றனர். அதன்பின் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
முதல்கட்ட விசாரணையில் நௌஷாத், 13 நாய்கள் என்ற எண்ணிக்கையை சுட்டிக்காட்டினாலும், அந்த வீடியோவில் அவர் 6 நாய்களுக்கு பாலியல் துன்புறுத்டல் செய்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் கோபத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. ஏராளமானோர், இந்த செயலை கண்டித்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
“குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மட்டும் இல்லை, இப்போது விலங்குகளும் இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன,” என பயனர் விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணையை போலீசார் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விலங்குகளின் மீதான இதுபோன்ற கொடூரங்களை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.