ஒரு நிறுவனத்திற்கு லோகோ என்பது மிகவும் முக்கியம் என்பதால், லோகோ கிரியேட்டர்களிடம் நிறுவனத்தை தொடங்கும் நபர்கள் பொறுப்பை ஒப்படைப்பார்கள். அதற்காக ஒரு கட்டணம் வசூலித்து, லோகோ கிரியேட்டர்கள் லோகோவை கிரியேட் செய்து கொடுப்பார்கள் என்பதும் தெரிந்தது.
₹5000 முதல் ₹50,000 வரை சிறந்த லோகோக்களுக்கு கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், கிரியேட்டர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது லோகோ கிரியேட் செய்வதற்கு ஒரு ஏஐ (AI) இணையதளம் அறிமுகமாகியுள்ளது. அந்த இணையதளம் 10 வினாடிகளில் நமக்கு தேவையான லோகோவை கிரியேட் செய்து கொடுத்து விடுகிறது.
நம் நிறுவனத்தின் பெயரை மட்டும் தெரிவித்து, லோகோ எந்த மாதிரி ஸ்டைலில் வேண்டும், பின்னணி மற்றும் லோகோ கலர் ஆகியவற்றை தேர்வு செய்துவிட்டால், அடுத்த 10 வினாடிகளில் லோகோ தயாராகி வருகிறது.
அந்த லோகோ திருப்தி அளிக்காவிட்டால், மீண்டும் புதிய லோகோவை தயார் செய்ய கோரிக்கையை விடலாம். விதவிதமான லோகோக்களை இந்த இணையதளம் உருவாக்கி கொடுக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த இணையதளம் மூலம், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் 10 வினாடிகளில் லோகோவை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையான இணையதளங்கள் பிரபலமாவதால், கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.