அது மட்டுமின்றி, அதானி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்த நிலையில், அதானி நிறுவனங்களின் பங்குகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து, சந்தை நேர்மறையாகச் சென்றது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 2000 புள்ளிகள் உயர்ந்தது, இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், நேற்று முன் தினம் 23 சதவீதம் சரிந்த நிலையில், நேற்று 6 சதவீதம் வரை மீண்டெழுந்தன. குறிப்பாக, அம்புஜா சிமெண்ட், ஏசிசி, அதானி என்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் நல்ல ஏற்றம் பெற்றன. இதனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.
மேலும், நேற்றைய பங்குச்சந்தையில் ஐடி துறை, பொதுத்துறை வங்கிகள், வேலை பங்குகளின் மதிப்பும் உயர்ந்தது. சென்செக்ஸ் 1960 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து, பங்குச்சந்தை ‘காளையின் பிடியில்’ இருந்தது.
அமெரிக்கா வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள், பங்குச்சந்தை எழுச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.