தினசரி ரூ.166 கட்டினால் ரூ.50 லட்சம்: எல்.ஐ.சியின் அசத்தலான திட்டம்..!

Published:

எல்ஐசி பினா ரத்னா திட்டத்தில் தினசரி ரூ. 166 செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ. 50 லட்சம் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக, பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சியின் பீமா ரத்னா என்ற திட்டம், சேமிக்க விரும்பும் தனிநபர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில் தினசரி ரூ.166 செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். இந்த திட்டத்தை பிறந்ததிலிருந்து 90 நாட்களுக்கு முன்பே இயக்க முடியும். அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். பிரீமியம் கட்டணத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் – தனிநபரின் விருப்பங்களை பொருத்து செலுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டம் 15, 20 மற்றும் 25 ஆண்டுகள் என பாலிசி செலுத்தும் வகையில் உள்ளது. பிரீமியம் தொகை செலுத்தும் காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறது. உதாரணமாக, 15 ஆண்டு காலத்தை தேர்வு செய்பவர்கள் வெறும் 11 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 20 ஆண்டு காலத்திற்கு 16 ஆண்டுகளும், 25 ஆண்டு காலத்திற்கு 21 ஆண்டுகள்பிரீமியங்களைச் செலுத்தெ வேண்டும்.

இந்தக் பாலிசியில் மாதத்திற்கு ரூ.5,000 அதாவது தினசரி ரூ. 166 முதலீடு செய்தால் முதிர்வின்போது ரூ.50 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எல்ஐசி பீமா ரத்னா பாலிசியானது, கணிசமான எடையைக் கொண்ட உத்தரவாதமான போனஸ்கள் தரும் ஒரு கவர்ச்சியான முதலீட்டு வழியாக உள்ளது என்பது தெளிவாகிறது.

மேலும் உங்களுக்காக...