வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி..!

Published:

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிரெடிட் கார்டுகளை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை வெளிநாட்டில் இந்திய வங்கிகளில் பெற்ற கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் 5% வரி மட்டுமே விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து சர்வதேச கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் மூலத்தில் 20% வரி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தொழில்துறையினரிடமிருந்து பெரும் அதிருப்தியை பெற்றுள்ளது.

மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக செலவு செய்வதை தவிர, இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் இந்த வரி பொருந்தும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வரி வசூலிக்கப்படும் என்றும், அவர்கள் பரிவர்த்தனையின் தொகையிலிருந்து டிசிஎஸ் கழித்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

அதிக மதிப்புள்ள வெளிநாட்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறையினர் கூறி வருகின்றனர். வெளிநாடுகளில் பணம் செலுத்த வேண்டிய நிறுவனங்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவை டிசிஎஸ் சேர்க்கும் என்றும், இது வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அனைத்து வரி செலுத்துவோரும் தங்களின் நியாயமான வரிகளை செலுத்துவதை உறுதி செய்வது அவசியம் என்றும்ம், ஆனால் டிசிஎஸ் வரி உயர்வு பெரும் விளைவை ஏற்படுத்தும் என்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டிசிஎஸ் குறித்த கருத்துகளுக்குத் தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கொள்கையை மறுபரிசீலனை செய்வதாகவும் அரசு கூறியுள்ளது. தொழில்துறையினரின் பின்னடைவுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் கொள்கையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...