200க்கும் அதிகமான படங்களில் நடித்த 28 வயது ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. என்ன நடந்தது?

  அடல்ட் திரைப்பட உலகில் நன்கு அறியப்பட்ட முகமும், நெட்ஃபிக்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றவருமான கைலே பேஜ், தனது 28வது வயதில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜூன் 25 அன்று உயிரிழந்தார். கைலே பைலண்ட்…

Kylie Page

 

அடல்ட் திரைப்பட உலகில் நன்கு அறியப்பட்ட முகமும், நெட்ஃபிக்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றவருமான கைலே பேஜ், தனது 28வது வயதில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜூன் 25 அன்று உயிரிழந்தார். கைலே பைலண்ட் என்ற உண்மையான பெயர் கொண்ட இவர், ஹாலிவுட்டில் உள்ள தனது வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனே அவரது நண்பர் 911 அவசர எண்ணுக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக அவசர சேவை படையினர் விரைந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கைலே ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

முதல்கட்ட விசாரணையில் கைலே மரணத்திற்கு போதைப்பொருள் அதிகமாக பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது. சம்பவ இடத்தில் ‘பெண்டானில்’ எனப்படும் போதைப்பொருளும், அதை பயன்படுத்தும் சில ஊசிகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைலே மரணம், அடல்ட் பொழுதுபோக்கு துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைலே உடன் இணைந்து பணியாற்றிய ‘Brazzers’ தயாரிப்பு நிறுவனம், தங்கள் இரங்கலை தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கைலே தனது சிரிப்பாலும், அன்பான குணத்தாலும், அவர் சென்ற இடமெல்லாம் அன்பை பரப்பும் இயல்பாலும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைலே பேஜ் 2016ஆம் ஆண்டு அடல்ட் திரைப்பட துறைக்குள் அடியெடுத்து வைத்து, மிக குறுகிய காலத்திலேயே பெரும் புகழ்பெற்றார். 200-க்கும் அதிகமான படங்களில் நடித்த இவர், ‘Brazzers’, ‘Vixen Media Group’, ‘Naughty America’ போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அவரது திடீர் மரணம், பொழுதுபோக்கு துறையில் போதைப்பொருள் மிகைப்பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. ஹெராயினை விட 50 மடங்கு வீரியம் மிக்க செயற்கை ஓபியாய்டான ‘பெண்டானில்’, சமீபத்திய ஆண்டுகளில் பல பிரபலங்களின் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.