அண்ணாமலை திமுகவின் ’ஸ்லீப்பர் செல்’.. அதிமுக – பாஜக கூட்டணியை உடைத்து மீண்டும் திமுக ஆட்சியை வரவைக்க வேண்டும் என்பது தான் அவரது டாஸ்க்.. அண்ணாமலை ஸ்லீப்பர் செல் என்பதை தாமதமாக பாஜக தலைமை புரிந்து கொண்டதா? பத்திரிகையாளர் மணி தரும் திடுக்கிடும் தகவல்கள்..!
தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பானது. ஆனால், இப்போது நடப்பது வேற லெவல். “அண்ணாமலை பாஜகவின் ஆள் அல்ல, அவர் திமுகவின் ஸ்லீப்பர் செல்” என்ற பத்திரிகையாளர் மணியின் பகிரங்க குற்றச்சாட்டு தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் ஒரு பேட்டியில், “திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதற்கு எதிராக மக்கள் மத்தியில் எந்தவிதமான ஆட்சிக்கு எதிரான மனநிலையும் (Anti-incumbency) இல்லை” என்று கூறியதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவது ஏன் என்ற கேள்வியை பத்திரிகையாளர் மணி எழுப்பியிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்த கருத்து, அவர் திமுகவின் பினாமி அல்லது ‘ஸ்லீப்பர் செல்’ என்ற வாதத்திற்கு வலு சேர்க்கிறது என்றும், திமுகவை எதிர்க்க வேண்டிய ஒரு பாஜக தலைவர், திமுகவுக்கு மறைமுகமாக கூட இல்லாமல் நேரடியாக ஆதரவாக பேசுவது, அவர் திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்ற உண்மையை வெளிக்காட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டை பத்திரிகையாளர் மணி முன்வைக்கிறார்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்பது உண்மைதான். ‘திமுகவா, பாஜகவா’ என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றார். ஆனால், இப்போது அவரது பேச்சு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது என்று பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருந்தது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி, அதிமுகவை பலவீனப்படுத்துவதன் மூலமே பாஜக வளர முடியும் என்று பாஜக நம்புகிறார்கள்.அதனால் தான் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று விமர்சித்தார், அதிமுக-பாஜக கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டிருந்தார் என்றும் பத்திரிகையாளர் மணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.ஒரு கூட்டணி கட்சி தலைவர், தங்கள் கட்சி தலைமைக்கு எதிராக பேசிய ஒருவருக்கு சந்திப்பு அனுமதி அளிப்பது, பாஜக கூட்டணியில் ஒரு பிளவை ஏற்படுத்த முயல்கிறது என்பதையே காட்டுவதாகவும் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பத்திரிகையாளர் மணி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,.
தனது கட்சிக்குள் இருக்கும் ஒருசிலர் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் பயணத்தில் உறுதியாக உள்ளார். செங்கோட்டையனின் பேச்சுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இத்தகைய அடக்குமுறைகள் ஒரு தலைவனை வளர்க்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். பாஜகவை நம்பி சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்றோர் எதிர்கொண்ட நிலைமையை, செங்கோட்டையன் உணர வேண்டும் என எடப்பாடியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் பத்திரிகையாளர் மணி அளித்த அனைத்து பேட்டிகளிலும் அண்ணாமலைக்கு எதிராகவே கருத்துக்களை பதிவு செய்துள்ளார். எனவே இந்த பேட்டியிலும் அண்ணாமலை ஒரு திமுகவின் ஸ்லீப்பர் செல் என்பது அவரது அதீத கற்பனையாக இருக்கலாம் என்று நடுநிலை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியல், தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பரபரப்படையும் என்பதில் சந்தேகமில்லை. அண்ணாமலையின் இந்த ‘ஸ்லீப்பர் செல்’ விவாதம், அடுத்த சில மாதங்களுக்கு தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
