ரிலையன்ஸ் ஜியோவின் புதிய நெட்வொர்க்கிங் தயாரிப்பான AX6000 வைஃபை 6 ரூட்டர், இந்திய சந்தையில் உயர்தர அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. 6 Gbps வரை வயர்லெஸ் வேகத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரூட்டர், வைஃபை 6 ஸ்டாண்டர்ட், MU-MIMO மற்றும் OFDMA போன்ற தொழில்நுட்பங்களை கொண்டது. ஸ்மார்ட் டி.வி., IoT சாதனங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கேமிங் கன்சோல்கள் போன்ற சாதனங்கள் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
இந்த ரூட்டர் 2,000 சதுர அடி வரை கவரேஜ் வழங்குகிறது. ட்ரூமெஷ் (TrueMesh) ஆதரவுடன், பயனர்கள் இணக்கமான ஜியோ வைஃபை எக்ஸ்டென்டர்களை பயன்படுத்தி சிக்னலை நீட்டிக்க முடியும். ரூ.14,999 என்ற எம்.ஆர்.பி விலையில் இருந்து தள்ளுபடியாக ரூ.5,999 விலையில் கிடைக்கும் AX6000, ஸ்மார்ட் ஹோம்கள் மற்றும் அதிவேக இணைய இணைப்பு தேவைப்படும் வீடுகளுக்கு சரியான விலையில் கிடைக்கிறது.
AX6000 ரூட்டர், ஜியோவின் பெரிய டிஜிட்டல் சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜியோஃபைபர், ஓ.டி.டி சேவைகள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் இப்போது வீட்டு நெட்வொர்க் கட்டுப்பாடு ஆகியவற்றுடன், ஜியோ ஒரு தடையற்ற ஸ்மார்ட் ஹோம் அனுபவத்தை வழங்க இலக்கு வைத்துள்ளது. உயர்நிலை ரூட்டர்களை மெஷ் ஆதரவுடன் தொகுத்து, சரியான விலையை பராமரிப்பதன் மூலம், இந்திய வீடுகளுக்கு டிஜிட்டல் முதுகெலும்பாக மாற ஜியோ பாடுபடுகிறது.
உங்கள் இணைய சேவை வழங்குநர் DHCP நெறிமுறையை பயன்படுத்தினால், AX6000 சந்தையில் கிடைக்கும் சிறந்த மதிப்பு கொண்ட வைஃபை 6 ரூட்டர்களில் ஒன்றாக இருக்கலாம். அதன் அதிவேகம், மெஷ் இணக்கத்தன்மை மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்கள் நவீன வீடுகளுக்கு ஏற்றவை.
இருப்பினும், உங்கள் இணைய சேவை வழங்குநர் இன்னும் PPPoE அல்லது IPoE இல் செயல்பட்டால், இந்த ரூட்டர் உங்களுக்கு வேலை செய்யாது என்பதையும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்..!