ஜெய்ப்பூரில் ஒரு நட்சத்திர ஹோட்டல் அறையில், ஒரு ஜோடி நெருக்கமாக இருந்த தருணம், ஜன்னல் திரை விலகி இருந்ததால், வெளியிலிருந்து ஒருவரால் படமாக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை வைத்து பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த காதல் ஜோடி அந்தரங்கமாக இருந்ததை பார்க்க கூட்டம் குவிந்ததால் அந்த பகுதியில் டிராபிக் ஜாம் ஆனதாகவும் கூறப்படுகிறது
இந்த வீடியோ பரவலாக பகிரப்படுவது, தனிப்பட்டவர்களின் தனியுரிமையை மீறுவதாகவும், அடுத்தவர்களின் அந்தரங்கத்தை ஒட்டுக்கேட்பது போல இருப்பதாகவும் பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது. அதேசமயம், சிலர், “தனியறையில் இருக்கும்போது கூட இந்த ஜோடி இவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்க கூடாது” என்று விமர்சிக்கிறார்கள். இந்த வீடியோவை முதலில் யார் படம்பிடித்து பரப்பியது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த சம்பவம், தனிப்பட்டவர்களின் எல்லைகள், சம்மதம், மற்றும் டிஜிட்டல் உலகில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஒரு பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் இந்த ஜோடி தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. வீடியோவில் அவர்களின் முகங்கள் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அவர்களின் செயல்கள் அங்கு என்ன நடந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகின்றன. மேலும், ஹோட்டலுக்கு வெளியே ஒரு கூட்டம் கூடி, அந்த ஜோடியை திட்டும் காட்சியும் வீடியோவில் உள்ளது. இது, இந்த சம்பவம் உடனடியாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை காட்டுகிறது.
இந்த வீடியோ வைரலானதும், “இதுபோன்ற உள்ளடக்கத்தை பகிரலாமா?” என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. ஒரு சாரார், “தம்பதியினர் தங்கள் தனியுரிமைக்காகவும், நாகரிகத்திற்காகவும் திரைகளை மூடியிருக்க வேண்டும்,” என்றனர். மற்றொரு சாரார், “வீடியோவை எடுத்தவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டார்கள்” என்று கடுமையாகக் கண்டித்தனர்.
சிலர் ஹோட்டலையும் விட்டுவைக்கவில்லை. “வாடிக்கையாளர்களின் தனியுரிமையை ஹோட்டல் உறுதிப்படுத்த தவறிவிட்டது” என்று விமர்சித்தனர். ஒரு பயனர், “இது தனியுரிமை மீறல், இந்தியச் சட்டத்தின் கீழ் (IPC பிரிவு 354C) இது சட்டவிரோதமானது. தம்பதியினர் கவனக்குறைவாக இருந்தாலும், வீடியோ எடுத்துப் பகிர்வது நெறிமுறையற்றது. திரைகளின் பராமரிப்பு போன்ற விஷயங்களில் ஹோட்டலின் பொறுப்பும் கேள்விக்குரியது. இது டிஜிட்டல் உலகில் தனியுரிமையின் சவால்களை உணர்த்துகிறது” என்று பதிவிட்டார்.
மற்றொருவர், “அவர்கள் ஒரு ஹோட்டல் அறையில் இருந்தார்கள், சாலையில் இல்லை. இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். ஆனால் இதற்கு மாறாக, இன்னொருவர், “அவர்கள் திரைகளை திறந்து வைத்திருந்தனர். அதை பார்க்கவில்லையா? என்று வாதிட்டார்.
“ஒரு ஜோடியின் இத்தகைய தனிப்பட்ட தருணங்களை பதிவுசெய்வது, அவர்கள் கவனக்குறைவாக இருந்தாலும், ஒழுக்கமற்றது. அவர்கள் அதை ஒரு ஹோட்டல் அறையில் செய்தார்கள், சாலையில் இல்லை. உங்கள் படுக்கையறையில் இருந்து உங்கள் மனைவியுடன் யாராவது ஒரு வீடியோவை பதிவிடுவதை கற்பனை செய்து பாருங்கள்,” என்று மற்றொரு கருத்து அழுத்தமாகப் பதிவானது.
தற்போது இந்த வைரல் வீடியோ குறித்து கருத்து மோதல்கள் தொடரும் நிலையில், இது தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.