#Breaking விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்; 3 சிறிய ரக செயற்கைகோள்களுடன் ஏவப்பட்டது!

By Amaravathi

Published:

சிறிய வகை ராக்கெட்களை சுமந்து செல்லும் SSLV-D2 ராக்கெட் சரியாக 9.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று 9.18 மணிக்கு ‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 6.30 மணி நேர கவுன்-டவுன் இன்று அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் மூலம் இஓஎஸ்-07 (EOS – 07) மற்றும் ஜோனஸ் 1 (janus -1) மற்றும் ஆசாதி சாட்-2 (AZAADI SAT-2) ஆகிய செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த முன்று செயற்கை கோள்களும் சரியாக 450 கிலோமீட்டர் புவி சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

சரியாக 15 நிமிடம் நடைபெற இருக்கும் இந்த பயணத்தில் 175.2 கிலோ எடை உள்ள செயற்கை கோள்களை இந்த ராக்கெட் விண்ணிற்கு எடுத்து செல்கிறது என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது.

குறிப்பாக இந்த எஸ்.எஸ்.எல்.வி டி 2 வகை ராக்கெட் குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்ப வடிவமைக்கப்பட்ட ராக்கெட் இடம் பெற்றுள்ளது.

34 மீட்டர் உயரமும் 2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ராக்கெட் 120 டன் எடை கொண்டது. இதில் 500 கிலோ வரை எடை உள்ள செயற்கை கோள்களை மட்டுமே விண்ணிற்கு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடதக்கது.

செயற்கை கோள்களை பொருத்தவரை EOS -7 இஸ்ரோவால் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கபட்ட செயற்கைகேள் ஆகும். janus -1 செயற்கைகோள் அமெரிக்க நிறுவனமான ANTARIS க்கு செந்தமான செயற்கைகோள் ஆகும்.

மேலும் அசாடி சாட்-2 ( AZAADI SAT-2 ) செயற்கைகோள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கை கோள் ஆகும். இது நாடு முழுவதும் உள்ள 750 பெண் மாணவர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கபட்ட செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று காலை விண்ணில் பாய தயாராகி வருகிறது.