இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!

  கடந்த 10 ஆண்டுகளாக, பெண்கள் நிதி மேலாண்மை நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்களின் உதவி இல்லாமலேயே, அவர்கள் தன்னிச்சையாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த…

woman at home

 

கடந்த 10 ஆண்டுகளாக, பெண்கள் நிதி மேலாண்மை நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்களின் உதவி இல்லாமலேயே, அவர்கள் தன்னிச்சையாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெண்கள் வருமானம் பார்த்தாலும், அதை எப்படி சேமிப்பது என்பதை தங்களுடைய வீட்டின் ஆண்களிடம் தான் ஆலோசனை கேட்பார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, பெண்கள் சுயமாகவே எதில் முதலீடு செய்ய வேண்டும், எதில் முதலீடு செய்யக்கூடாது என்பதை சிந்தித்து, யாருடைய உதவியும் இன்றி நிதி மேலாண்மையை நிர்வகித்து வருகின்றனர்.

பெண்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு சேமிக்கின்றனர், குழந்தைகளின் கல்விக்கு சேமிக்கின்றனர், சுற்றுலா செல்ல சேமிக்கின்றனர், சரியாக திட்டமிடுகின்றனர். மேலும், பங்குச்சந்தை முதலீடுகளிலும் கூட சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

“கோல்டு பிரிட்ஜ்” நிறுவனத்தின் தலைவர் இதுகுறித்து கூறியபோது, “எங்களுடைய பெண் வாடிக்கையாளர் ஒருவர், கடந்த ஆண்டு பங்குச்சந்தை ஏற்றத்தின் போது தனது முழுமையான பணத்தை வெளியே எடுத்து, அதற்கு நிகரான வேறு ஒரு திட்டத்தில் முதலீடு செய்து உள்ளார். பெரும்பாலான ஆண்கள் கூட இதை செய்யவில்லை. தற்போது அவர் நல்ல லாபத்தில் இருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, பெண்கள் நிதி மேலாண்மையை சிறப்பாக நிர்வகித்து வருவது, நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.