இந்தியாவில் அனைத்து படிப்புகளுக்கும் நல்ல வசதிகள் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பல மாணவர்கள் “அமெரிக்காவில் படித்தால்தான் கௌரவம்” என்று எண்ணி அமெரிக்காவுக்கு சென்று படிக்கின்றனர். அந்த வகையில், பலர் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு கஷ்டப்படுகிறார்கள் என்றும், இதுதொடர்பான செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில், ஒரு இந்திய மாணவர் கைகள் கட்டப்பட்டு, தரையில் படுக்க வைக்கப்பட்டு, ஒரு மிருகத்தைப் போல் நடத்தப்பட்ட வீடியோவை “எக்ஸ்” தளத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த மாணவரை அதிகாரிகள் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தியதாகவும், மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்றும், மிருகத்தை விட மிகவும் மோசமாக அந்த மாணவர் நடத்தப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் உடனடியாக தலையிட்டு மாணவருக்கு உதவி செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹரியானாவை சேர்ந்த அந்த மாணவர், விமானம் ஏறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது திடீரென கைது செய்யப்பட்டதாகவும், அவரை பைத்தியம் போல காட்ட போலீசார் முயற்சித்ததாகவும் அங்கே இருந்த சிலர் கூறுகின்றனர்.
அந்த மாணவரை போலீசார் தரையில் படுக்க வைத்து மிக மோசமாக நடத்தி உள்ளார்கள் என்று ஒரு “எக்ஸ்” பதிவு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும், வெளிநாட்டிலிருந்து படிக்க வரும் மாணவர்களை அந்த நாட்டு மாணவர்களும் மக்களும் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், தங்கள் உரிமைகளை வெளிநாட்டவர்கள் வந்து பறித்துக் கொள்வதாகவே அவர்கள் கருதுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
எனவே, வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் தயவுசெய்து யோசிக்க வேண்டும் என்றும் பல “எக்ஸ்” பதிவு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?” என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர் என்றும், “இந்தியாவில் இல்லாத அப்படி என்னபடிப்பு அமெரிக்காவில் இருக்கிறதா?” என்பதை இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் யோசிக்க வேண்டும் என்றும் இந்த பதிவுக்கு ஏராளமான கருத்துகள் பதிவாகி வருகின்றன.
https://x.com/SONOFINDIA/status/1931723889119523125