இந்தியாவில் உள்ள 84% ஐடி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வினோத நோய்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

  இந்தியாவில் உள்ள 84% ஐடி ஊழியர்களுக்கு ஒரு வகையான நோய் ஏற்பட்டிருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின்படி,…

IT staffs

 

இந்தியாவில் உள்ள 84% ஐடி ஊழியர்களுக்கு ஒரு வகையான நோய் ஏற்பட்டிருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின்படி, 71% பணியாளர்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும், 34% ஊழியர்கள் மெடபாலிக் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன் அதிகரிப்பது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐடி பணியாளர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது, வேலை சார்ந்த மன அழுத்தம், சரியான உறக்கம் இன்மை, மாற்றத்திற்கேற்ப ஷிப்ட் வேலை செய்வது போன்ற காரணங்கள் இந்த நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

மேலும், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பது, உடல் வேலை குறைவாக இருப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் குறைக்கின்றன. அதோடு, புகையிலை மற்றும் மது பழக்கமும் உடல் நலத்துக்கு தீங்கான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவின் இறுதியில் ஐடி ஊழியர்கள் 84 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் ஒரு தலைமுறையே நோயின் பிடியில் சிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, ஐடி ஊழியர்கள் வேலை பார்ப்பதோடு உடல் நலத்தையும் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.