தீங்கிழைக்கும் மால்வேரில் இருந்து தப்பிக்க இந்திய அரசின் டூல்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..!

By Bala Siva

Published:

மொபைல் போனில் தற்போது தீங்கிழைக்கும் மால்வேர்கள் அடிக்கடி தானாகவே இன்ஸ்டால் ஆகி விடுகிறது என்பதும் நாம் கவனக்குறைவாக வரும் எஸ்எம்எஸ் களில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து விட்டால் நம்முடைய மொபைல் போனில் மால்வேர் இன்ஸ்டால் ஆகி நம்முடைய தனிப்பட்ட தகவல்களை திருடிவிடும் என்பதன் பார்த்து வருகிறோம்.

இந்த தீங்கிழைக்கும் மால்வேரில் இருந்து தப்பிக்க ஏற்கனவே பல டூல்கள் ஆன்லைனில் இருக்கும் நிலையில் தற்போது இந்திய அரசு இது குறித்த டூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் டிஜிட்டல் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக இந்த டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாட்நெட் என்ற பெயரில் உள்ள இந்த டூல் குறித்த விழிப்புணர்வு குறுஞ்செய்திகள் மக்களை சென்று அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியர்களின் சாதனங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த டூல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டூலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

பாட்நெட் டூலை டவுன்லோடு செய்வது எப்படி?

1. முதலில் சைபர் ஸ்வச்தா கேந்திரா போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
2. “பாதுகாப்பு கருவிகள்” என்பதி கிளிக் செய்யவும்.
3. நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் மாடலை தேர்வு செய்ய வேண்டும்.
4. டவுன்லோடு என்பதை கிளிக் செய்யவும்.

டவுன்லோடு செய்யப்பட்டவுடன், அவற்றை உங்கள் சாதனத்தில் பாட்நெட் இன்ஸ்டால் ஆகி, தீங்கிழைக்கும் மால்வேரில் இருந்து உங்கள் சாதனத்தை இந்த டூல் காக்கும். மேலும் உங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்து ஏதேனும் தேவையில்லத மென்பொருள் இருந்தால் அதை உங்கள் சாதனத்திலிருந்து அகற்றும்.

மேலும் உங்களுக்காக...