இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தையா தூண்டுற.. பாகிஸ்தான்னு ஒரு நாடு இருந்தால்தானே இனிமேல் தூண்டுவ.. பலுசிஸ்தான், சிந்துவுக்கு இந்தியா மறைமுக ஆதரவா? துண்டு துண்டாக உடைகிறதா பாகிஸ்தான்? பாகிஸ்தான் பாதியாக குறைந்தால் தான் புத்தி வரும்..

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்தியா சுதாரிப்பாக உள்ளது. பாகிஸ்தானின் நிலையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், அது பொருளாதார ரீதியாக கையேந்தும்…

india vs pakistan

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்தியா சுதாரிப்பாக உள்ளது.

பாகிஸ்தானின் நிலையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், அது பொருளாதார ரீதியாக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை விதைப்பதையே தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.தனது குடிமக்களின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ஒரு நாடு, இந்தியாவுடன் போரிடுவதிலும், எல்லையில் ஊடுருவல்களை தூண்டிவிடுவதிலும் மட்டுமே குறியாக இருப்பது அதன் “டிஎன்ஏ” ஆக மாறிவிட்டது. உலக அரங்கில் யாரிடம் வேண்டுமானாலும் கையேந்த தயாராக இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் மடியில் அமர்ந்து கொண்டு அமைதியை குலைக்க துடிக்கிறது.

வங்காளதேசத்தை பொறுத்தவரை, ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு பிறகு சூழல் முற்றிலும் மாறியுள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய ஆட்சி மற்றும் பிஎன்பி கட்சியின் எழுச்சி போன்றவை அந்நாட்டை மீண்டும் பாகிஸ்தானின் கொள்கைகளை நோக்கி இழுத்து செல்கின்றன.

1971-ல் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற இந்தியா உதவிய வரலாற்றை மறந்துவிட்டு, மீண்டும் அதே பாகிஸ்தானுடன் கைகோர்க்க முயல்வது விந்தையாக உள்ளது. இஸ்லாமிய கொள்கைகளை காரணம் காட்டி வங்காளதேசத்தை ஒரு தீவிரவாத கூடாரமாக மாற்ற நடக்கும் முயற்சிகள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா தனது உள்நாட்டு பாதுகாப்பை முதலில் பலப்படுத்த வேண்டும். இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் நவீன ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும். வெறும் ‘லத்தி’ கொண்டு அமைதி காக்கும் காவல்துறையை விட, எல்லையோரங்களில் துப்பாக்கி ஏந்திய சிறப்புப் படைகளின் தேவை அதிகமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஏற்படுத்திய மாற்றத்தை போல, ஊடுருவல்கள் மற்றும் தீவிரவாத சிந்தனைகள் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வீடுகளுக்குள் இருக்கும் “கிருமிகளை” அழிப்பதன் மூலமே வெளிப்புற தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ள முடியும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இனி “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” போன்ற சிறிய அளவிலான தாக்குதல்களாக மட்டும் இருக்கக்கூடாது. ஆயிரம் காயங்களை ஏற்படுத்தி இந்தியாவை ரத்தப்போக்கில் ஆழ்த்துவது என்ற பாகிஸ்தானின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஒரு தீர்க்கமான ராணுவ நடவடிக்கை அவசியம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் , பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் நிலவும் அதிருப்திகளை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தனது நிலப்பகுதியை இழக்கும் வரை அல்லது பல துண்டுகளாக சிதறும் வரை அது தனது வால் பிடிக்கும் வேலையை நிறுத்தாது என்பது நிதர்சனம்.

சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் தலையீடு இந்தியாவை சுற்றி ஒரு நெருக்கடியை உருவாக்க முயல்கிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்கா அளிக்கும் முன்னுரிமை மற்றும் வங்காளதேசத்தின் புதிய அரசியல் மாற்றங்கள் ஆகியவை இந்தியாவின் செல்வாக்கை குறைக்க தீட்டப்பட்ட திட்டங்களாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் வெவ்வேறு பகடைகளை உருட்டுகின்றன. ஆனால், இந்திய பெருங்கடலின் உண்மையான எஜமான் இந்தியா என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது. அண்டை நாடுகள் இந்தியாவின் வலிமையை புரிந்து கொள்ளும் வகையில் நமது வெளியுறவு கொள்கையும் ராணுவ நகர்வுகளும் அமைய வேண்டும்.

இறுதியாக, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுமே இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விட முயல்கின்றன. “வெறுங்கையுடன் வருபவர்களை பார்த்து சுட வேண்டாம்” என்ற மனிதாபிமானத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவர்கள் பயங்கரவாதத்தை உள்ளே அனுப்புகிறார்கள். அமைதிக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம், ஆனால் அது பலன் தராதபோது ராணுவம் களமிறங்கி எவ்வித தயக்கமுமின்றி எதிரிகளை அழிக்க வேண்டும். இந்தியாவின் துணிச்சலான ராணுவமும், தெளிவான அரசியல் தலைமையுமே இந்த இரண்டு அண்டை நாடுகளையும் கட்டுக்குள் வைக்கும் ஒரே வழியாகும். 2026-ல் இந்தியா தனது பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய தருணம் இது.