மோடிடா… டிரம்ப் வரி விதிப்பு அறிவிப்புக்கு பின் லாபம் அடைந்த ஒரே நாடு இந்தியா தான்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி அறிவிப்பை தொடர்ந்து உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. ஆனால், இந்தியா மட்டுமே பெரிய பாதிப்பு இன்றி தப்பித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 2.5% மற்றும் 2.2%…

modi trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி அறிவிப்பை தொடர்ந்து உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. ஆனால், இந்தியா மட்டுமே பெரிய பாதிப்பு இன்றி தப்பித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 2.5% மற்றும் 2.2% உயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 2% க்கும் அதிகமான உயர்வையும் பதிவு செய்துள்ளன. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் லாபம் அளித்த ஒரே பங்குச்சந்தை இந்தியா மட்டுமே என பல ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் இந்த வாரம் மட்டும் நிப்டி குறியீடு 4% க்கும் அதிகமாக ஏறியுள்ளது, கடந்த ஐந்து நாட்களில் 6.5% உயர்வு கண்டுள்ளது. இது மற்ற முக்கிய குறியீடுகளை விட இந்தியாவின் செயல்திறனை முன்னிலைப்படுத்துகிறது:

ஷாங்காய் காம்போசிட்: +2%

நிக்கேய் (ஜப்பான்): +1.3%

எஸ்&பி 500: -1.4%

டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகள் வந்த ஏப்ரல் 2 தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பையும் மீறி பாசிட்டிவ் பக்கம் செல்லும் ஒரே சந்தையாக இந்தியா திகழ்கிறது. இது இந்தியாவின் நிலைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பின் உலக பங்குச்சந்தைகள் பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளன:

எஸ்&பி 500: -7%

டோ ஜோன்ஸ்: -6%

பிரான்சின் CAC: -7.5%

ஜெர்மனியின் DAX: -5.4%

எஃப்டிஎஸ்இ 100 (UK): -3.9%

ஆசியாவில்:

ஹாங் செங்: -7.8%

தைவான்: -8.4%

சீனாவின் CSI 300: -3.9%

நிக்கேய்: -3.8%

தென் கொரியாவின் கொஸ்பி: -1.4%

இந்த அனைத்து சந்தைகளும் சிவப்பில் மூழ்கியுள்ள நிலையில், இந்தியா மட்டும் ஒளிரும் புள்ளியாக திகழ்கிறது.

இந்தியாவின் ஏற்றத்திற்கு ஒரே காரணம் வர்த்தக நம்பிக்கையும் உள்ளார்ந்த நிலைத்தன்மையும் தான். இந்தியாவில் பங்குச்சந்தை நம்பிக்கையை பலவீனப்படுத்தாமல் வைத்துள்ள காரணங்கள் உள்ளன. அவை அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்பு, வரி விவகாரத்தில் மோதல் இன்றி செயல்படும் இந்திய அணுகுமுறை, அமெரிக்கா இறக்குமதிகளுக்கான வரிவிதிப்பு தளர்வுகள், கச்சா எண்ணெய் விலை குறைவு, பணவீக்கம்.

உலக வர்த்தக பதற்றங்களின் தாக்கத்திலிருந்து இந்தியாவை பாதுகாத்த முக்கிய அம்சம் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சியே ஆகும். Alchemy Capital நிறுவனத்தின் ஹீரன் வேத் கூறும்போது, “இந்தியாவின் புத்திசாலித்தனமான தூதரக ரீதியிலான நடவடிக்கைகள்  மற்றும் வர்த்தக நட்புறவு நடவடிக்கைகள் என்றும், இது முதலீட்டாளர் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.