இந்த போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான். இதில் பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் என்றும், இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் வென்றுள்ளது.
2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரன்னர்-அப் ஆக வந்த இந்திய மகளிர் அணி, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருப்பார்.