இன்னொருவரை முதல்வராக்கவா கட்சி ஆரம்பித்தேன்.. ஸ்ரெயிட்டா முதல்வர் தான்.. விஜய் மாஸ் பிளான்.. ஆட்டம் காணும் திராவிட கட்சிகள்..

  இன்னொருவரை முதல்வராக்கி நான் துணை முதல்வராவதற்காக என்னுடைய சொந்த காசை போட்டு கட்சி ஆரம்பிக்கவில்லை. நான் முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். எனவே, இன்னொரு கட்சியுடன்…

vijay

 

இன்னொருவரை முதல்வராக்கி நான் துணை முதல்வராவதற்காக என்னுடைய சொந்த காசை போட்டு கட்சி ஆரம்பிக்கவில்லை. நான் முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். எனவே, இன்னொரு கட்சியுடன் கூட்டணி சேர மாட்டேன். என்னுடைய கட்சிக்கு வேண்டுமானால் அவர்கள் கூட்டணி வரட்டும்; என்னை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரட்டும்” என்று விஜய் மறைமுகமாக இன்றைய செயற்குழு கூட்டத்தில் கூறியிருப்பதை அடுத்து, திராவிடக் கட்சிகள் ஆட்டம் கண்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற நடிகர்கள் போல் கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலில் தோல்வி அடைந்து, இரண்டாவது தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிடவில்லை என்றும், முதல் தேர்தலிலேயே ஆட்சி அல்லது எதிர்க்கட்சி, ஒருவேளை முதல் தேர்தலில் எதிர்க்கட்சி என்றால் அடுத்த தேர்தலில் ஆட்சி என்ற தொலைநோக்கு திட்டம் தான் அவரிடம் இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளிடம் எந்த காரணத்தை முன்னிட்டும் கூட்டணி கிடையாது என்றும், பா.ஜ.க.வை தனது கட்சி பக்கமே நெருங்க விடமாட்டேன் என்றும் விஜய் கூறிவரும் நிலையில், அவர் நம்பிக்கையுடன் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான் என்றும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலே நிச்சயம் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை, காங்கிரஸ் எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணி ஆட்சி அமைத்துவிடும் என்பது ஒரு ராசியாக இருக்கும் நிலையில், அந்த ராசி விஜய்க்கும் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மொத்தத்தில், விஜய்யின் மாஸ் பிளான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றும், திமுக, அ.தி.மு.க. இல்லாத திராவிட ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், ஊழல் இல்லாத மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு அரசு அமைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு என்றும், அந்த கனவை நிறைவேற்றும் நாள் நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.