ஹரியானாவின் மஸ்த்கர் சீக்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவரங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ISIக்கு வழங்கியதாக கூறப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவேந்திர சிங் என பெயர் கொண்ட அந்த இளைஞர், 25 வயதானவர் மற்றும் ஒரு பிஜி டிப்ளோமா மாணவர் ஆவார். விசாரணையின் போது, அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ISI உடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலைகளை பற்றி அந்த அமைப்புக்கு தகவல்கள் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது..
“ஆபரேஷன் சிந்தூருடன்” தொடர்புடைய தகவல்களையும் தேவேந்திர சிங், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ISI-க்கும் அவ்வப்போது அனுப்பியதாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்களை சைபர் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர்கள் தெரிவித்தார்.
தேவேந்திர சிங், பஞ்சாபில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்தில் MA படித்து வந்தவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராக்கு யாத்திரை சென்றபோது, அங்கு பாகிஸ்தான் உளவுத்துறை உறுப்பினர்களுடன் தொடர்பில் வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம், ஹரியானாவில் 24 வயதான ஒருவரை பாகிஸ்தானில் உள்ள சில நபர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாக கைது செய்த சில நாட்களுக்கு பின் நடந்தது. ஹரியானாவில் கைது செய்யப்பட்டவரின் பெயர் நௌமான் இலாஹி என தெரிகிறது.
அதற்கு முந்தைய ஒரு சம்பவத்தில், பஞ்சாப் போலீசார், இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை ISI-க்கு வழங்கியதாக கூறி, பலக் ஷேர் மசீக் மற்றும் சுராஜ் மசீக் ஆகிய இருவரையும் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
