’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன் டிக்கெட்டை காண்பித்தால் இலவச டீ காபி வழங்கப்படும் என டீக்கடைக்காரர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியானது ’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கேரளாவில் இந்த படம் திரையிடப்பட்டது என்பதும் எதிர்ப்புகளை மீறி அம்மாநில மக்கள் இந்த படத்திற்கு ஆதரவு தந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில் இந்த படத்தை தடை செய்வதாக மாநில முதல்வர் அறிவித்திருந்தார். தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலத்தில் இருந்து இந்த படத்திற்கு எதிர்ப்பு இல்லை என்பது மட்டுமின்றி இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் நாடு முழுவதும் 64 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு கிடை த்த வரவேற்பு காரணமாகவும் இந்த படம் குறித்த பாசிட்டிவ் கருத்துக்களை பிரதமர் மோடி கூறிய காரணத்தாலும் இந்த படம் அடுத்த வாரம் 37 நாடுகளில் திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்: தவிடுபொடியான எதிர்ப்புகள்.. ரூ.100 கோடி வசூல் செய்தது ‘தி கேரளா ஸ்டோரி’..!
இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர் தனது டீக்கடை முன்னர் ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு அந்த தியேட்டர் டிக்கெட் கொண்டு வந்து காண்பித்தால் அவர்களுக்கு இலவசமாக டீ, காபி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏராளமான பேர் அந்த படம் பார்த்தவர்கள் டிக்கெட்டை காண்பித்து டீ காபி குடித்து வருகின்றனர். இது ஒரு வித்தியாசமான அறிவிப்பாக இருப்பதை அடுத்து பலர் இதே போன்ற அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.