தவிடுபொடியான எதிர்ப்புகள்.. ரூ.100 கோடி வசூல் செய்தது ‘தி கேரளா ஸ்டோரி’..!

சமீபத்தில் வெளியானது தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்த போதிலும் அந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

அடா சர்மா, சித்தி இதானி உள்பட பலர் நடித்த தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து அந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் கேரளாவைச் சேர்ந்த அமைப்புகள் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதன் பிறகு தமிழகத்திலும் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

the kerala story 1

தமிழகத்தில் இந்த படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என உளவுத்துறை அரசுக்கு பரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த படம் திரையிடப்பட்டது என்பதும் அதன் பிறகு திரையரங்கு உரிமையாளர்களே இந்த படத்தை திரையிடுவதில்லை என்ற முடிவை எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் மேற்குவங்க மாநிலம் முதல்வர் தைரியமாக இந்த படத்தை தடை செய்வதாக அறிவித்தார். இந்த படத்தை திரையிட அனுமதிக்காதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக மற்றும் மேற்குவங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

the kerala storyஇந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழ்நாடு கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே எதிர்ப்பு கிளம்பினாலும் இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களிலும் அவ்வாறு ஆதரவு இருந்தது என்பதும் இந்த படத்தை கேரளாவின் பிரச்சினையாக பார்க்காமல் நாட்டின் பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அப்பாவி பெண்களை மதம் மாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று தீவிரவாதிகளாக மாற்றும் கும்பலை தோலுரித்து காட்டும் படம் என்றும் பலர் கூறினார். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒன்பது நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 100 கோடி வசூலை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 19 கோடி வசூலித்ததாக தெரிகிறது

கடும் எதிர்ப்புகள் இருந்தாலும் அந்த எதிர்ப்புகளை எல்லாம் தவிடு பொடி ஆக்கிவிட்டு வசூலில் இந்த படம் சக்கை போடு போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட்டை 15 முதல் 20 கோடி என்று கூறப்படும் நிலையில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் பெறாது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews