படுக்கையறை ரகசியங்களை நமக்கு தெரியாமல் வாட்ஸ் அப் பதிவு செய்கிறதா? அதிர்ச்சி தகவல்..!

Published:

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸ்அப் செயலியை நம்ப முடியாது என ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் படுக்கை அறையில் உள்ள ரகசியங்களை இன்னொருவர் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் ஃபோனை படுக்கை அறையில் வைத்துவிட்டு நான் தூங்கிக் கொண்டிருந்தாலோ அல்லது ரகசியமாக நமது துணையுடன் பேசிக் கொண்டிருந்தாலோ அந்த குரல் ஒலியை வாட்ஸ் அப் வாட்ஸ் அப் மூலம் இன்னொருவர் பதிவு செய்யலாம் என்றும் இது ஒவ்வொரு மனிதனின் தனி உரிமை பாதிக்கும் அம்சம் என்றும் மொபைல் போன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்  பயனர்கள் தூங்கும் போது கூட மைக்ரோஃபோன்களை பயன்படுத்துவது குறித்து சில கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. எலான் மஸ்க் உள்பட பலர் இது குறித்து கேட்டு தங்கள் கவலையை எழுப்பி உள்ளனர். ஆனால் இது குறித்த குற்றச்சாட்டுகளுக்கு வாட்ஸ் அப் நிறுவன மறுப்பு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் மூலம் நாம் பேச வேண்டும் என்றாலும் அல்லது வீடியோ மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலோ மைக்ரோபோனை நாம் ஆன் செய்தால் மட்டுமே செயல்படும் என்றும் இது ஒரு வேலை ஆண்ட்ராய்டு செயலியின் தவறாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு பயனர் விழித்திருக்கும் போதும் அவர் தூங்கும் போது கூட வாட்ஸ் அப் ஆடியோவை பதிவு செய்ததை கண்டதாக ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்திருந்தார். நான் இரவில் முழுவதும் தூங்கிக் கொண்டிருந்தபோது காலை 6 மணிக்கு எழுந்த போது வாட்ஸ் அப் பின்னணியில் மைக்ரோபோனை எனக்கு தெரியாமல் வேறு யாரோ பயன்படுத்தி உள்ளதை நான் பார்த்தேன் என்றும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இதனை வாட்ஸ் அப் முழுமையாக மறைத்துள்ளது. பயனர்கள் தங்கள் மைக் அமைப்புகளில் முழு கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும் பயனார் அனுமதி அளித்தவுடன் தான் அழைப்பு அல்லது குரல் அல்லது வீடியோ பதிவு செய்ய முடியும் என்றும் வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இது ஆண்ட்ராய்டு தவறாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் ஒரு மொபைல் ஃபோனை நாம் படுக்கை அறையில் வைத்து கொண்டு தான் நமது துணையுடன் ரகசியமாக ஏதும் பேசினால் அதை இன்னொருவர் தனது இடத்திலிருந்து கேட்க முடியும் என்பதற்கு சாத்தியம் உள்ளது என்றும் இது தனி மனித உரிமையின் கை வைப்பது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...