ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்க Google Translation என்ற அம்சத்தை அனைவரும் பயன்படுத்தி வருவது தெரிந்ததே. ஆனால் இந்த மொழிபெயர்ப்பை அப்படியே பயன்படுத்த முடியாது என்பதோடு, அதில் சில தவறுகள் மற்றும் கோளாறுகள் காணப்படும் என்பதால், மொழிபெயர்க்கப்பட்டதை மீண்டும் சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பலரும் குறைபட்டுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், Google Translation மிகவும் துல்லியமாக மொழிபெயர்க்க, தற்போது AI டெக்னாலஜியை கூகுள் நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் Api மூலமாக மொழிபெயர்ப்பு அம்சம் விரைவில் வரவிருப்பதாகவும், கூகுளின் பிரவுசர்களில் மட்டும் இது செயல்படும் வகையில் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால், மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை கூகுள் விரைவில் வெளியிடும் என்றும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழிகளையும் மிக எளிமையாகவும் துல்லியமாகவும் மொழிபெயர்க்கும் வகையில் கொண்டு வரப்படவுள்ள கூகுளின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.