பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் புகுந்த சிறுத்தை: ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!

By Bala Siva

Published:

 

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் திடீரென சிறுத்தை ஒன்று புகுந்ததால், ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மிகுந்த கஷ்டப்பட்டு அந்த சிறுத்தையை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் இரவும் பகலும் பணி புரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை காணப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், எலக்ட்ரானிக் சிட்டியில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்தனர். கூண்டுகள் வைக்கப்பட்டன, ட்ரோன் மூலம் சிறுத்தையை கண்டுபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இரண்டு நாட்கள் கழித்து, வனத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியின் காரணமாக, தற்போது அந்த சிறுத்தை பிடிபட்டதாகவும், அந்த சிறுத்தையை காட்டுக்குள் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவல், இரவில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்த இன்னும் சில ஐடி ஊழியர்கள் முழுமையாக மீளவில்லை என கூறப்படுகிறது.