கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் இத்தனை சிறப்பம்சங்களா? செம்ம கேமிரா..!

Published:

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஃபோனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஃபோனில் கேமரா செம்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் சாம்சங் ISOCELL GN2 சென்சார் கொண்ட 50MP பிரதான கேமரா மற்றும் சோனி IMX386 சென்சார் கொண்ட 12MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் சாம்சங் 3J1 சென்சார் கொண்ட 8MP செல்பி கேமரா ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

அதேபோல் கூகுள் பிக்சல் 8 ப்ரோ சாம்சங் ISOCELL GN2 சென்சார் கொண்ட 50MP பிரதான கேமரா, சோனி IMX787 சென்சார் கொண்ட 64MP அல்ட்ராவைடு கேமரா, சாம்சங் ஜிஎம்5 சென்சார் கொண்ட 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் சாம்சங் 3J1 சென்சார் கொண்ட 11MP செல்பி கேமரா ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

மேலும் கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஒரே நேரத்தில் பல காட்சிகளை கேமிராவில் படம் பிடிக்க அனுமதிக்கும். அதுமட்டுமின்றி சிறந்த HDR புகைப்படங்களை உருவாக்க உதவும்

கூகுள் பிக்சல் 8 ப்ரோ உடல் வெப்பநிலை சென்சார் கொண்டிருக்கும் என்றும், இந்த சென்சார் கேமராவுக்கு முன்னால் உள்ள பொருள்கள் மற்றும் நபர்களின் வெப்பநிலையை அளவிட முடியும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகியவை 2023ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோவுக்கான கேமரா விவரக்குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் கேமிரா பிரியர்களுக்கு இந்த போன் சிறப்பான தேர்வாக இருக்கும்.

மேலும் உங்களுக்காக...