10 நாட்களில் ரூ.500 இறங்கிய தங்கம் விலை.. இன்னும் சரியுமா?

Published:

தங்கம் விலை கடந்த பத்து நாட்களில் ஒரு சவரனுக்கு 500 ரூபாய் வரை இறங்கி இருப்பது தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு தங்கம் வாங்குபவர்களுக்கு இது சரியான நேரம் என்றும் கருதப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை கடந்த மே மாதம் 17ஆம் தேதி ஒரு சவரன் 45,360 என விற்பனையானது. ஆனால் தற்போது சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 44 ஆயிரத்து 840 என விற்பனை ஆகி வருகிறது. சரியாக 10 நாட்களில் ஒரு சவரனுக்கு 520 குறைந்து உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமாகும்.

தங்கம் எப்போதுமே ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் நீண்ட காலத்தில் ஒரு லாபத்தை தரும் முக்கியமான முதலீடு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். தங்கம் ஏறும்போதும் இறங்கும்போதும் தங்கம் வாங்கினாலும் அது எப்போதுமே நமக்கு லாபத்தை தான் கொடுக்கும் என்றும் ஐந்து வருடங்கள் கழித்து தங்கம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்பதே முதலீட்டாளர்களின் எண்ணமாக உள்ளது.

தற்போது அமெரிக்க சந்தையில் தங்கம் விலை குறைந்து இருப்பதாலும் தங்கத்தின் தேவை குறைந்து இருப்பதாலும் தங்கத்தின் விலை குறைந்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் தங்கம் விலை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

எனவே தங்கம் விலை குறைந்துள்ள நேரத்தில் வாங்குவதற்கான வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டதால் தங்க நகை கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. இதற்கும் தங்கம் விலைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் இந்த நேரத்தை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறை என்று கூறப்படுகிறது.

தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் 60 ஆயிரம் ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக நகை கடைக்காரர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...