நத்திங் ஸ்மார்ட்போன் 2 இந்தியாவில் எப்போது வெளியாகும்? என்னென்ன சிறப்பம்சங்கள்?

நத்திங் ஸ்மார்ட்போன் 2 ஜூலை மாதம் வெளியிட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது

நத்திங் ஸ்மார்ட்போன் 2 வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்த போன் இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஜூலை மாதம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் 2 அசல் நத்திங் ஃபோனை விட சில வகையில் மேம்படுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Snapdragon 8+ Gen 1 செயலி மூலம் இயக்கப்படும். 50MP பிரதான கேமரா மற்றும் 120Hz அம்சங்களுடன் கூடிய 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

அசல் நத்திங் ஸ்மார்ட்போனை போலவே அம்சமான வடிவமைப்பில் இருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23 மற்றும் ஐபோன் 14 போன்றவற்றுக்கு நத்திங் ஃபோன் 2 ஒரு முக்கிய போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் ஸ்மார்ட்போன் 2 பற்றி இதுவரை வெளியான தகவல் இதோ: விவரங்களும் இதோ:

வெளியீட்டு தேதி: ஜூலை 2023

செயலி: Snapdragon 8+ Gen 1

ரேம்: 8 ஜிபி அல்லது 12 ஜிபி

சேமிப்பு: 128 ஜிபி அல்லது 256 ஜிபி

டிஸ்ப்ளே: 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே

பின்புற கேமராக்கள்: 50MP பிரதான கேமரா, 12MP அல்ட்ராவைடு கேமரா, 8MP டெலிஃபோட்டோ கேமரா

முன் கேமரா: 16MP

பேட்டரி: 4,700mAh

ஆண்ட்ராய்டு 13

விலை: ரூ.24,400

நத்திங் ஃபோன் 2 சக்திவாய்ந்த செயலி, பெரிய பேட்டரி மற்றும் சிறந்த கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வெளிப்படையான வடிவமைப்பும் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்.