10 மாதங்களாக வயிற்றில் குழந்தை இருந்ததே தெரியாமல் இருந்த பெண்.. வயிற்று வலி என வந்தவருக்கு பிறந்த ஆண் குழந்தை.. குவா குவா சத்தம்..!

  10 மாதங்களாக வயிற்றில் குழந்தை இருந்ததே தெரியாமல், வயிற்றுவலி என்று மருத்துவமனைக்கு வந்த பெண் ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரியம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் லி என்ற அந்தப் பெண்மணி,…

baby

 

10 மாதங்களாக வயிற்றில் குழந்தை இருந்ததே தெரியாமல், வயிற்றுவலி என்று மருத்துவமனைக்கு வந்த பெண் ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரியம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் லி என்ற அந்தப் பெண்மணி, மதிய உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஏதோ அசௌகரியமாக உணர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில், அதிகமாக சாப்பிட்டதால்தான் இப்படி என நினைத்திருக்கிறார். ஆனால், வயிற்று வலி விடாமல் தொடரவே, தனி ஆளாக தன் எலெக்ட்ரிக் பைக்கிலேயே பிற்பகல் 2 மணியளவில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் லி-க்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை நடந்துகொண்டிருந்தபோதே, வயிற்று வலி திடீரென உச்சத்தை எட்டியுள்ளது. சில நிமிடங்களிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, பனிக்குடமும் உடைந்துவிட்டது. நிலைமையை புரிந்துகொண்ட மருத்துவமனை ஊழியர்கள், சுறுசுறுப்புடன் செயல்பட்டு, மகப்பேறு மருத்துவ குழுவை உடனே வரவழைத்தனர். சரியாக பிற்பகல் 3.22 மணிக்கு, லி, 2.5 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தையை இயற்கையான முறையில் பெற்றெடுத்தார்.

பிரசவத்திற்கு பிறகு, லி மேல் சிகிச்சைக்காக நகர சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டார். “நான் கர்ப்பமாக இருந்தேன் என்று மருத்துவர்கள் சொன்னதும், நான் முழுவதுமாக அதிர்ந்துபோனேன். மாதவிடாய் சுழற்சி தனக்கு எப்போதும் சீரற்றதாக இருந்ததால், மாதவிடாய் நின்றுபோனதை கூட தான் கவனிக்கவில்லை என அவர் ஒப்புக்கொண்டார்.

லி மற்றும் அவரது கணவருக்கு ஏற்கெனவே ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும், கருத்தடை முறைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தியதாகவும் லி தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்திருந்தாலும், கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளான சோர்வு போன்றவை தனக்கு அறவே இல்லை என்றும் லி குறிப்பிட்டார். என் முதல் கர்ப்பத்தின் போது எனக்கு சோர்வு இருந்தது. ஆனால் இந்த முறை நான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் என் எலெக்ட்ரிக் பைக்கை அடிக்கடி ஓட்டினேன். அதிர்ஷ்டவசமாக, என் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தான். இது அவனது வலிமையான உயிர்ச்சக்தியை காட்டுகிறது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மற்றொரு நகரத்தில் வேலை செய்துகொண்டிருந்த லி-யின் கணவர், மருத்துவமனையிலிருந்து எதிர்பாராத அழைப்பு வந்ததும், தனது மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் கவனித்துக்கொள்ள உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.