மெட்ரோ ரயில் இப்போது வெறும் பயணத்துக்கானது மட்டுமின்றி தினசரி பயணிக்கும் பலருக்கு அது கிட்டத்தட்ட ஒரு இரண்டாவது வீடாகவே மாறிவிட்டது, அதுவும் அச்சு அசலாக! மேக்கப் போடுவது, தலை சீவுவது தொடங்கி, ‘Get Ready With Me’ வீடியோ எடுப்பது வரை… பயண நேரத்தை பராமரிப்பு நேரமாக மாற்றும் இந்த ட்ரெண்ட் இப்போது ரொம்பவே அதிகமாகிவிட்டது. ஆனால், இது பெரும்பாலும் இணையத்தில் கடுமையான விமர்சனங்களையே எதிர்கொள்கிறது.
இப்படியொரு தருணம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், மெட்ரோ ரயிலில் ஒரு பெண், காதில் ஹெட்ஃபோனுடன், கையில் ஒரு புத்தகத்துடன் நின்று கொண்டிருக்கிறார். ஆனால், அங்கே இருந்த அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது என்ன தெரியுமா? அவர் சாதாரணமாக முகத்தில் அணிந்திருந்த வெள்ளை நிற ஷீட் மாஸ்க்தான்!
அந்த வீடியோவில் எந்தவித அநாகரிகமும் இல்லை. அந்த பெண் அமைதியாக ஒரு மூலையில், தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும், மெட்ரோ ரயில்கள் இப்படி தனிப்பட்ட இடம்போல் பயன்படுத்தப்படுவது அதிகரிப்பது குறித்து உடன் பயணித்த சிலர் சற்றுக் கவலை தெரிவித்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும், உடனே பலரின் கவனத்தை பெற்று, கலவையான விமர்சனங்களைத் தூண்டியது. பலர் அந்தப் பெண் யாரையும் தொந்தரவு செய்யாமல், தனக்கு தானே இருந்ததை ஆதரித்தனர். சிலரோ, டெல்லி மெட்ரோ எப்படி மெதுவாக அழகு நிலையமாக” மாறி வருகிறது என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர்.
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், ” இந்தியாவில் எல்லாமே ஒரு பிரச்சனைதான்,” என்று ஆதங்கப்பட்டார். மற்றொருவர், “அண்ணா, நீங்க ‘உங்க வேலையை பாருங்க’ன்னு கேள்விப்படலையா?” என்று எழுதினார். ஒருவர், “அவர் யாரையும் தொந்தரவு செய்யலை, அவட் பாட்டுக்கு இருக்க விடுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று பகிர்ந்தார்
இன்னொரு கருத்து, “இது ட்ரெண்ட் இல்லை, இது நேர மேலாண்மை!” என்று கச்சிதமாக குறிப்பிட்டார். “குறைந்தபட்சம் அவர் எந்த ரீல் டிராமாவும் செய்து மக்களை சங்கடப்படுத்தவில்லை,” என்று ஒரு பயனர் பாராட்டினார். இன்னொருவர், “இன்றைய நாட்களில், ஒருவர் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தால் கூட, அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு,” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
ஒரு பயனர் கிண்டலாக, “நாளை நான் என் டூத்பேஸ்ட் மற்றும் பிரஷை கொண்டு வருவேன். எல்லோரும் இதேபோல சொல்வார்கள் என்று நம்புகிறேன். உங்கள் வேலையால் உங்கள் பெயரைப் பிரகாசமாக்குங்கள்,” என்றார். மற்றொருவர், “அக்கா கூல் ஆக நடிக்கிறாங்க,” என்று பகிர்ந்தார். இன்னும் சிலர் அழகுன்னா அது மனசுல இருக்கனும், முகத்துல இல்ல என்பதை பெண்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்’ என்றார்.
இந்தக் காணொளி இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
https://www.instagram.com/reel/DKrqED9PuAa/?utm_source=ig_web_copy_link