ஜெர்மன் நாட்டின் ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனம், இந்தியாவில் தனது புதிய QLED Google TV வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. 32 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும் இந்த டிவிகள், வெறும் ₹10,999 என்ற ஆரம்ப விலையில் தொடங்கி, அனைத்து தரப்பு இந்திய வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிய ஸ்மார்ட் டிவி தேடுபவர்கள் முதல், உயர்தர பொழுதுபோக்கு அமைப்பை விரும்புபவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் இந்த ரகம் அமைந்துள்ளது. இந்த மாடல்கள் அனைத்தும் பிளிப்கார்ட்டில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும்.
இதில் அசத்தலான அம்சங்கள் என்னவெனில் ஸ்மார்ட் அனுபவமும் தரமான ஆடியோ-வீடியோவும் தான். அதாவது Android TV OS இல் இயங்கும் இந்த ப்ளூபங்க்ட் டிவிகளில், Google Assistant, உள்ளமைக்கப்பட்ட Chromecast, Netflix, Prime Video, Disney+ Hotstar, YouTube போன்ற பல ஸ்ட்ரீமிங் ஆப்கள் முன்னரே நிறுவப்பட்டுள்ளன.
50″, 55″, மற்றும் 65″ அளவுகளில் கிடைக்கும் பிரீமியம் QLED 4K மாடல்கள், HDR10, Wide Colour Gamut (WCG) மற்றும் 1.1 பில்லியன் வண்ணங்களை ஆதரித்து, துடிப்பான மற்றும் கூர்மையான காட்சிகளை வழங்குகின்றன. ஒலித் தரத்திலும் அசத்துகின்றன:
55” மற்றும் 65” டிவிகள் 4 ஸ்பீக்கர்கள் மூலம் 70W ஒலி வெளியீட்டைக் கொண்டுள்ளன.
50” டிவி 2 ஸ்பீக்கர்கள் மூலம் 50W ஒலி வெளியீட்டைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் Dolby Atmos மற்றும் Dolby Digital Plus சான்றிதழ் பெற்றவை.
குறைந்த பட்ஜெட்டில் டிவி தேடுபவர்களுக்காக, 32” மற்றும் 40” QLED டிவிகள் முறையே HD Ready மற்றும் Full HD தெளிவுத்திறன்களை வழங்குகின்றன. இந்த சிறிய மாடல்களிலும் ஒலியின் தரம் குறையவில்லை. இவை 48W ஆடியோ வெளியீட்டையும் Dolby MS12 சரவுண்ட் சவுண்ட் ஆதரவையும் கொண்டுள்ளன.
விலை விவரம் மற்றும் சிறப்புச் சலுகைகள்:
32-இன்ச்: ₹10,999
40-இன்ச்: ₹15,499
50-இன்ச்: ₹27,999
55-இன்ச்: ₹31,999
65-இன்ச்: ₹44,999
SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியை ப்ளூபங்க்ட் வழங்குகிறது.
ந்தியாவில் ப்ளூபங்க்டின் உரிமம்பெற்ற சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவ்நீத் சிங் மார்வா இந்த புதிய டிவி குறித்து கூறியபோது வெளிப்புற சவுண்ட்பார்கள் அல்லது ஹோம் தியேட்டர் சிஸ்டம்களின் தேவையை நீக்கும் வகையில், சக்திவாய்ந்த உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி, இந்தத் தொடரை உருவாக்க நிறுவனம் ஒரு வருடத்திற்கும் மேலாகச் செலவிட்டுள்ளது.
ப்ளூபங்க்டின் இந்த புதிய தயாரிப்பு வரிசை, இந்திய பார்வையாளர்களுக்கு போட்டி விலையில் மதிப்புமிக்க அம்சங்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்பத்துடன் வீட்டு பொழுதுபோக்கின் புதிய அத்தியாயத்தை எழுத இலக்கு கொண்டுள்ளது.