பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான் வழிகளை ஒன்றுக்கு ஒன்று மூடியுள்ளன. இதன் பொருள், இருநாட்டின் வான் பரப்பிற்குள் எந்தவொரு பயணியர் விமானமும் நுழைய முடியாது. இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டாலும், அதன் பாதிப்பு மிக குறைவாகவே இருக்கும். இது அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் கொண்டது என்றாலும், இந்திய விமான துறைக்கு உடனடி பெரிய பாதிப்பு இல்லை.
மும்பை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்கள் பெரிதாக பாதிக்கப்படாது, ஏனெனில் அவை சாதாரணமாக பாகிஸ்தான் வழியாக செல்லவில்லை. ஆனால், டெல்லி போன்ற வட இந்திய நகரங்களில் இருந்து மேற்கே செல்லும் விமானங்களுக்கு மாற்று பாதைகளை எடுத்து செல்ல வேண்டிய நிலை வரும். இதனால் பயண நேரம் அதிகமாகும்.
டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு சிறிய தாமதம் ஏற்படலாம். மேலும், விமான நிறுவனங்களுக்கு அதிகமாக எரிபொருள் செலவாகி, செயல்பாட்டு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த சவால்கள் சிறியவை என்றும், விமானத்துறை நிபுணர்கள் அவற்றை சமாளிக்க முடியும் என்றும் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அரசியல் முக்கியத்துவத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தச் செலவுகள் சிறியது தான் என்கின்றனர்.
இருநாடுகளும் எடுத்து வரும் நிலைப்பாடுகள் இப்போது விமான பாதைகளையும், நடவடிக்கைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளன. எளிதில் மாறிக்கொள்ளும் திறன் கொண்ட விமான துறை, இவற்றைச் சமாளிக்கத் தேவையான வழிகளை கண்டுபிடிக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.