28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்ததா மாலத்தீவு? உண்மை நிலை என்ன?

Published:

சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மாலத்தீவு சென்று இந்த நிலையில் அப்போது மாலத்தீவுக்கு சொந்தமான 28 தீவுகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த  செய்தி உண்மை அல்ல என்று தற்போது தெரியவந்துள்ளது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு பயணம் மேற்கொண்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பாட்டு கூட்டமைப்பினர் ஆலோசனை நடைபெற்றதாகவும் அதில் 2024 முதல் 2029 வரை ஆயிரம் மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளின் திறனை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஜெய்சங்கர் மற்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் மாலத்தீவு குடியரசு குடிமைப்பணி ஆணையம் இடையே 1000 மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு கையெழுத்து இடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மாலத்தீவு தனக்கு சொந்தமான 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் இந்த தீவுகளில் குடிநீர் சுகாதாரம் மேம்பாடு பணிகளை இந்தியா மேற்கொள்ள இருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது. மாலத்தீவு 28 தீவுகளை இந்தியாவுக்கு கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...