துரைமுருகன் ஒரு பேட்டியில எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு பெரிய ஆளுங்களோட விஸ்வரூபத்தை எல்லாம் நாங்க பார்த்திருக்கோம்னு சொல்லியிருக்காரு. எம்.ஜி.ஆர் இருந்தவரைக்கும் திமுகவால ஆட்சியைப் பிடிக்க முடியல, அதேபோலதான் ஜெயலலிதா இருந்த வரைக்கும்னு அவரே வெளிப்படையா ஒத்துக்கிட்டாரு. இதைப் பார்த்தா, இப்போ விஜய் காலம் வந்திருச்சு, அவர்தான் அடுத்து ஆட்சியைப் பிடிப்பாருன்னு இவங்க மனசுக்குள்ள ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாங்களோன்னு தோணுது. துரைமுருகனே நாங்க விஜயத்தையும் பார்த்திருக்கோம்னு சொல்றப்ப, அதை ஒரு மறைமுகமான ஒப்புதலாத்தான் பார்க்க வேண்டியிருக்கு.

இப்போ விஜய் அரசியல் களத்துல இறங்கி, ஆட்சி செய்ற இடத்துல உட்கார்ந்துட்டாரு, அவரை இனி யாராலும் தடுக்க முடியாதுங்கற உண்மையை அவங்களே உணர்ந்துட்டாங்களோன்னுதான் நினைக்கத் தோணுது. உண்மையச் சொல்லப்போனா, மக்கள் திமுகவை முதல் தேர்வா…

stalin duraimurugan

இப்போ விஜய் அரசியல் களத்துல இறங்கி, ஆட்சி செய்ற இடத்துல உட்கார்ந்துட்டாரு, அவரை இனி யாராலும் தடுக்க முடியாதுங்கற உண்மையை அவங்களே உணர்ந்துட்டாங்களோன்னுதான் நினைக்கத் தோணுது. உண்மையச் சொல்லப்போனா, மக்கள் திமுகவை முதல் தேர்வா வச்சிருந்தாங்கன்னு சொல்றத விட, எதிர்க்கட்சிகள் சரியா செயல்படல, வேறு வழியே இல்லாமதான் மக்கள் திமுகவை தேர்ந்தெடுத்தாங்கன்னுதான் வரலாற்றைப் பார்த்தா புரியுது. 1996-ல ஜெயலலிதா ஆட்சி மேல இருந்த கோபத்துலதான் மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டாங்க, 2006-லயும் பெரிய பெரும்பான்மை இல்லாமதான் ஆட்சிக்கு வந்தாங்க, இதையெல்லாம் துரைமுருகன் மாதிரியான மூத்த தலைவர்களே ஒத்துக்கறாங்க. சொந்த பலத்துல ஆட்சிக்கு வராம, மத்தவங்க பலவீனத்துல ஆட்சிக்கு வந்ததை அவங்க எப்பத்தான் ஒத்துக்கப்போறாங்கன்னு தெரியல.

திருமாவளவனும், வைகோவும் கூட இதையேதான் சொல்றாங்க, இப்போ இருக்குற ஆட்சிக்கு இவங்க எந்த அளவுக்குப் பொறுப்புன்னு மக்கள் முன்னாடி அவங்க விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க. ஒரு விஷயம் என்னன்னா, திமுக ஆரம்பத்துல இருந்தே கூட்டணி இல்லாம தனிச்சுப் போட்டியிடவே மாட்டாங்க. யாருக்கு எதிரா அரசியல் பண்ண ஆரம்பிச்சாங்களோ, அவங்க கூடயே கூட்டணி வச்சதுதான் திமுகவோட வரலாறு. மொத்தத்துல, கூட்டணி இல்லாம களத்துல நிக்கத் தயங்குற திமுக, விஜய் உருவாக்கி வச்சிருக்கிற இந்த மாத்தத்தைத் தடுக்க முடியாதுங்கறதுதான் நிதர்சனம்; துரைமுருகனோட பேச்சே இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துற மாதிரிதான் இருக்கு.