நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.. திமுக ஒரு தீய சக்தி.. நாட்டை அழிக்க வந்த சக்தி.. என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.. தற்போது முதலமைச்சரான நிலையில் திமுகவை மிகவும் நக்கலாக பேசி வருகிறார் விஜய்.
சட்டசபையில் ‘அப்பாவை காணோம்’; என நக்கலடித்தார். நேற்று கரூரில் பேசியபோது ‘கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்து புரோட்டா போட்டு விட்டார்கள்.. திமுக ஒரு தீய சக்தி.. அந்த கட்சி எப்போதும் மீண்டும் எழாதபடி மக்கள் தண்டனை கொடுக்கவேண்டும்’ என்றெல்லாம் பேசி இருந்தார்..
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த துரைமுருகன் ‘பேச்சில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்.. எதிர்கட்சி தலைவர்களையும் மதித்து, அரவணைத்து செல்லும் முதலமைச்சர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.. ஆனால், பட்டாக்கத்தி கட்டாக்குத்தி போல பேசுவது முறையல்ல. வெற்றி பெற்ற எல்லோரும் வீரர்கள் அல்ல. எனவே, இந்த வெற்றி நிலையானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
அப்படித்தான் ஒரு காலத்தில் ‘எங்களை விட்டால் ஆளில்லை’ என காங்கிரஸ் சொன்னது.. அந்த கட்சி தோற்கமலா போய்விட்டது. எங்களை அடக்க முடியாது என அதிமுக சொன்னது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்.. அது இரண்டையும் ஒன்றாக பாவித்து அடுத்தமுறை மக்களை கவர்பவன்தான் அரசியல்வாதியே தவிர ஏதோ வந்துவிட்டோம் என்பதற்காக, அதுவும் சொந்த பலத்தில் இல்லாமல் ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு தர்பார் ஆகாது’ என சொல்லியிருக்கிறார்.
