பணம் பத்தும் செய்யும்.. ஒரு வயது குழந்தைக்கு ரூ.5.8 கோடி மதிப்பு ரோல்ஸ் ராய் கார் பரிசு வழங்கிய தந்தை.. இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்குதே..

துபாயில் வசிக்கும் ஓர் இந்திய கோடீஸ்வரர் தனது ஒரு வயது மகளுக்கு, இளஞ்சிவப்பு ராய்ஸ் ஃபாண்டம் காரை பரிசாக அளித்த காணொளி வெளியாகி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த கார் ரூ.5.8 கோடி…

baby 1

துபாயில் வசிக்கும் ஓர் இந்திய கோடீஸ்வரர் தனது ஒரு வயது மகளுக்கு, இளஞ்சிவப்பு ராய்ஸ் ஃபாண்டம் காரை பரிசாக அளித்த காணொளி வெளியாகி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த கார் ரூ.5.8 கோடி மதிப்புடையது என கூறப்படுகிறது. தந்தையர் தினத்தில் செய்யப்பட்ட இந்த ஆடம்பர பரிசு இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், பலர் இந்த செல்வ செழிப்பை கடுமையாக சாடியுள்ளனர்.

துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் நிறுவனர் சதிஷ் சன்பால், தனது மனைவி தபிந்தாவுடன் சேர்ந்து, தங்கள் செல்ல மகள் இசாபெல்லாவுக்கு ஒரு ஆடம்பர காரை பிறந்த நாள் பரிசாக வழங்கிய காட்சி சமூக வலைத்தள காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காரின் உள்ளே உள்ள ஒவ்வொரு இருக்கையிலும் சிறுமியின் பெயரின் முதல் எழுத்துகள் அழகாக பதிக்கப்பட்டிருந்தன. மேலும், காரின் நம்பர் பிளேட்டில் “CONGRATULATIONS Isabella” என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இங்கிலாந்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, இந்த நிகழ்வுக்காகவே துபாய்க்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கார் அறிமுகக் காட்சி, ஒரு சினிமா படக்காட்சியைப் போலவே பிரம்மாண்டமாக இருந்தது. சதிஷ் சன்பால் குடும்பத்தினர், தங்கள் மற்றொரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். நிகழ்வு நடந்த இடம் பெரிய டெடி பியர்கள், வண்ணமயமான பூக்கள், மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இசாபெல்லாவுக்கும் அவளது பெற்றோருக்கும் இளஞ்சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. உள்ளே, ‘ISS’ என்ற குழந்தையின் பெயரின் முதல் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான கதவுகள் பிரமாண்டமாக திறக்கப்பட்டு, கார் பலூன்களாலும், இன்னொரு பெரிய டெடி பியராலும் சூழப்பட்டு வெளிப்பட்டது.

சட்டப்படி இந்த காரை ஓட்ட இன்னும் 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய இசாபெல்லா, ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடுவதை அந்த காணொளியில் காண முடிந்தது. இந்த காணொளி விரைவில் வைரலாக பரவியது. இணைய பயனர்களில் பெரும்பாலானோர், இந்த அளவுக்கு அதிகமான செல்வ செழிப்பைக் காட்சிப்படுத்தியதற்காக அந்த தொழிலதிபரை கடுமையாக விமர்சித்தனர்.

இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் “மக்கள் தங்கள் பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் சில தொண்டு நிறுவனங்கள் ஆதரவுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறு குழந்தைக்கு ரோல்ஸ் ராய்ஸ் கிடைப்பதை காண்பது வருத்தமாக இருக்கிறது,” என்று வேதனையுடன் கருத்துத் தெரிவித்தார்.

மற்றொரு பயனர் “இந்த ஆடம்பரம் எல்லாம் மகளுக்காக அல்ல, தன்னுடைய செல்வ செழிப்பை விளம்பரம் செய்யவே அந்த நபர் இதை செய்துள்ளார்’ என்று கூறினார்.

இது ஒரு நாகரீகமற்ற மற்றும் ஆர்ப்பாட்டமான செயல். பணம் ஒருபோதும் அன்பை வெளிப்படுத்தும் செயல் அல்ல’ என்று சாடினார். நான்காவது இன்ஸ்டாகிராம் பயனர், “இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு பொருள் பரிசாக கிடைப்பது எவ்வளவு நல்ல உணர்வு, ஆனால் அடுத்த 17 ஆண்டுகளுக்கு அதை பயன்படுத்த முடியாது என்று தெரிந்தால்,” என்று கிண்டலாக கருத்துத் தெரிவித்தார்.

இசாபெல்லாவின் முதல் ஆடம்பரக் கொண்டாட்டம் இது முதல் முறை அல்ல. கடந்த பிப்ரவரியில், அவளது முதல் பிறந்தநாள் விழாவிற்காக அட்லாண்டிஸ் தி ராயல் முழுவதுமாக ஒரு குளிர்கால wonderland ஆக மாற்றப்பட்டது. அதில் செயற்கை பனி, பளபளக்கும் சரவிளக்குகள் மற்றும் இளவரசிக்கு ஏற்ற குதிரை வண்டி நுழைவாயில் ஆகியவை இருந்தன. இந்த நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் ரஹத் ஃபதே அலி கான், தமன்னா பாட்டியா, ஆதிஃப் அஸ்லாம் மற்றும் நோரா ஃபதேகி போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.