உலகில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை ஆபரேஷன்.. மருத்துவர்கள் சாதனை..!

உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தான் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவது…

baby1

உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

பொதுவாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தான் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவது உண்டு. ஆனால் கருவில் இருக்கும் போது மூளையில் குறைபாடு இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் கருவில் இருக்கும் போதே அறுவை சிகிச்சையும் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அழைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த லூசியானா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்க இருந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையில் சில பிரச்சினைகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த பிரச்சனையால் குழந்தை பிறக்கும் போது அல்லது பிறந்த பின்னர் ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கருவில் இருக்கும் போதே அந்த குழந்தைக்கு மூளை ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். நரம்பியல் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆகியோர் ஆலோசனை செய்து பல மணி நேரம் இந்த ஆபரேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கருப்பை வெட்டப்பட்டு அந்த குழந்தையின் மண்டை ஓடு மட்டும் கருவில் வளரும் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன் கரு சரியான நிலையில் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும் கருவில் இருக்கும் குழந்தை அசையாமல் இருப்பதற்காக கருவில் இருக்கும் குழந்தைக்கு ஊசி போடப்பட்டது. மேலும் தாய்க்கு வலி தெரியக்கூடாது என்பதற்காக வலி நிவாரண ஊசியும் போடப்பட்டது. இதனை அடுத்து கருவில் இருக்கும் குழந்தை அசையாமல் இருந்தபோது அறுவை சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனார்.

baby1a

தாயின் வயிற்றில் இருந்து ஒரு துளை போடப்பட்டு அந்த துளை வழியாக ஒரு வடிகுழாய் இறக்கி, அதில் சிறிய உலோகச் சுருள்கள் ரத்த ஓட்டத்தை மெதுவாகியதாகவும் குழந்தையின் நரம்பில் உள்ள அழுத்தத்தை குறைக்க செய்ததாகவும் மருத்துவர்கள் கூறினார். அதன் பிறகு மூளையில் உள்ள பிரச்சினைக்குரிய பகுதிகள் அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த தாய்க்கு குழந்தை பிறக்கும் போது குழந்தை இயல்பாக மற்ற குழந்தை போல் இருக்கும் என்றும் அந்த குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த குழந்தை பிறந்தது என்றும் 4.2 பவுண்டுகள் எடையுள்ள அந்த குழந்தை தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பிறவி குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் கர்ப்பத்தில் இருக்கும் போது கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்து விட்டால் அந்த குழந்தை பிறக்கும் போதே நலமாக பிறக்கும் என்றும் இல்லையென்றால் பிறந்த குழந்தை மூளை வளர்ச்சி இன்றி கடைசி வரை இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு நான் முத்தமிட்டேன் என்றும் உலகிலேயே பிறக்கும் முன்பே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை என்ற பெருமையை எனது குழந்தை பெற்று உள்ளது என்றும் அந்த குழந்தையின் தாய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.