விஜய் வீட்டுக்கு வந்து 10 வருஷம் ஆச்சு! அதிர்ச்சி தகவல் கொடுத்த எஸ் ஏ சி.பேச்சு!

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி என பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் விஜய்க்கும் அவரது தந்தை சந்திரசேகருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு நீண்ட காலமாகவே பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த வருடம் எஸ்ஏசி பிறந்தநாளன்று அவரை சந்திக்காதது மற்றும் வாரிசு ஆடியோ லாஞ்சில் சரிவர கண்டுகொள்ளாதது , இது பொதுவெளியில் பிரச்சனை சமூக வலை தளங்களில் பூதாகரமாக அமைந்தது.

இந்நிலையில் அண்மையில் விஜய் தனது தாய் சோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது . மேலும் மற்றோரு தரப்பினர் அவர் தாயுடன் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டது புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இது குறித்து சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,அவர் தனது பெற்றோரின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தங்களை சந்தித்ததாக கூறினார், நல்ல காரியங்கள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை என கவலை தெரிவித்தார்.

உலகில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை ஆபரேஷன்.. மருத்துவர்கள் சாதனை..!

மேலும் 10 வருடங்கள் கழித்து விஜய் வீட்டிற்கு வந்ததை பெரிய மகிழ்ச்சியான செய்தி தான் எனக் கூறியவர் அண்மை சந்திப்பில் பல புகைப்படங்கள் இருக்கின்றன எனவும் ஒவ்வொன்றாக அவை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...