நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. 4 நாட்களுக்கு கனமழை.. வெப்பத்தில் இருந்து தப்பித்த மக்கள்..!

Published:

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மே மாதம் என்றாலே அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தும் என்பதும் இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அக்னி நட்சத்திரத்திற்கு பதிலாக கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது என்பதும் அதனால் ஒரு சில பகுதிகளில் குளிர்ச்சியான தற்போது இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மே 6 அல்லது 7ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் அது காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதை அடுத்து இன்று தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அது மட்டும் இன்றி இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainதென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதனால் தமிழக கடற்கரையோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக மே 5 முதல் மே 8ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வர பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மே 6 முதல் 8-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக 7 டிகிரி பாரன்ஹீட் வரை வழக்கத்தை விட அதிகமாக பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மே 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது பின்னர் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டிருப்பதால் 7ஆம் தேதிக்கு பின்னர் அதிக மழை பெய்யும் என்று இதனால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மே 7 மற்றும் 8அம் தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...