உலகத்தில் பல்வேறு வகையான விதவிதமான உணவுகள் இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உணவுகளையும் நம்மால் இருந்த இடத்திலேயே இருந்தது ருசிக்கக்கூடிய வசதியும் இருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவில் இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒன்று கலப்படம் இன்னொன்று ஃபாஸ்ட் ஃபுட். இவை இரண்டுமே மனித உடலுக்கு கேடு விளைவிப்பது தான். தற்போதைய காலகட்டது இளைஞர்கள் பாஸ்ட் புட் மோகத்தினால்தான் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறார்கள். திரும்பும் இடமெல்லாம் பாஸ்ட் புட் கடைகள் தான் நிரம்பி இருக்கிறது.
பாஸ்ட் புட் சாப்பிடுவது தான் ட்ரெண்ட் என்று இளைஞர்கள் நினைத்துக் கொண்டு பிரண்ட்ஸ்களோடு வெளியே செல்லும்போது இந்த கடையை தான் தேடி செல்கின்றார்களே தவிர ஆரோக்கியமான உணவுகளை யாரும் தேடி செல்வதில்லை. ஏற்கனவே உணவுப்பொருட்கள் விளைவிப்பதிலும் செய்வதிலும் பல கலப்படங்கள் இருந்து மக்களின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதில் அவர்களும் தேடி போய் கேடு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கின்றனர்.
அப்போது உலகில் தூய்மையான ஒரு உணவு என்பதே கிடையாதா எல்லாமே இந்த காலகட்டத்தில் கலப்படமாக இருக்கிறதா என்று நீங்கள் நினைத்தால் உலகிலேயே தூய்மையான ஒரு உணவு என்று ஒன்று இருக்கிறது. அது என்னன்னு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அதைப்பற்றி இனி காண்போம்.
உலகிலேயே மிகவும் தூய்மையான ஒரு உணவு என்றால் அது நெய் தான். இதை தற்போது ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடையில் விற்கப்படும் கலப்படமான நெய் இதில் சேராது. வீட்டில் சுத்தமான பசும்பாலை எடுத்து அதில் வெண்ணெய் தயாரித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய் தான் உலகிலேயே மிகவும் தரம் வாய்ந்தது சுத்தமானது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். இது அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஒரு விஷயம்தான்.