தொகுதி பங்கீட்டை துவங்கிய திமுக!.. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி!..

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை தக்க வைக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த முறையும், போனமுறை கூட்டணி அமைத்த அதே அரசியல் கட்சிகளுடன்…

Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை தக்க வைக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த முறையும், போனமுறை கூட்டணி அமைத்த அதே அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதேநேரம், தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்தமுறை புதிதாக கூட்டணியில் இணைந்துள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுபற்றி பேசுவதற்காக அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது திமுக. இந்நிலையில்தான், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை இன்று அறிவாலயத்தில் துவங்கியிருக்கிறது திமுக. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று துவங்கியது திமுக.

இந்நிலையில், திமுக 167 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடலம் எனத்தெரிகிறது. அதாவது, காங்கிரஸ் – 28, தேமுதிகவுக்கு – 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 6, விடுதலை சிறுத்தை கட்சி – 6, முஸ்லீம் லீக் கட்சி – 3, ஓபிஎஸ் – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி – 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.