ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிக்கலில் நெல்சன் மனைவி.. 75 லட்சம் பரிமாற்றத்தின் பின்னணி என்ன?

Published:

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் தற்போது இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவும் காவல்துறை விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார். மோனிஷாவின் வங்கிக் கணக்கிலிருந்து மொட்டை கிருஷ்ணனுக்கு ரூ. 75 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்தது ஏன் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. காவல் துறையினர் தனிப்படை அமைத்து அடுத்தடுத்து இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்! தமிழ்நாடு இனி சிறக்கும்!! களத்தில் இறங்கிய விஜய்..!

பழிக்குப் பழி நடந்த இந்தக் கொலை சம்பவத்தில் இதுவரை ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அஸ்வத்தாமன், அவரது தந்தை, சுரேஷின் மனைவி பொற்கொடி மற்றும் திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொற்கொடி அளித்த வாக்குமூலத்தின்படி தலைமறைவாகியுள்ள ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்டோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவும் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார்.

ரவுடி சம்போவின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் என்பவருக்கு மோனிஷாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 75 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தப் பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மோனிஷா தரப்பில் வழக்கு சம்பந்தமாகவும், நண்பர் என்கிற முறையிலும் இந்தப் பணம் அவருக்கு அனுப்பப்பட்டது என மோனிஷா தரப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நெல்சனின் மனைவி மோனிஷா ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் சிக்கியுள்ளதால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் உங்களுக்காக...