ரோட்லயே எல்லாம் செஞ்சிட்டா.. வீட்ல போய் என்ன செய்வீங்க.. மெட்ரோவில் இளம் காதலர்களின் ரொமான்ஸ்.. பெரியவரின் கண்டிப்பு..!

டெல்லி மெட்ரோவில் நடந்த ஒரு சம்பவம், அமைதியான பயணத்தை பதற்றமாக்கி, பொது இடங்களில் ரொமான்ஸ் செய்வது பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சோர்வுடன் தன் காதலியின் தோளில் சாய்ந்த இளைஞரை, பக்கத்தில் இருந்த ஒரு முதியவர்…

romance

டெல்லி மெட்ரோவில் நடந்த ஒரு சம்பவம், அமைதியான பயணத்தை பதற்றமாக்கி, பொது இடங்களில் ரொமான்ஸ் செய்வது பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சோர்வுடன் தன் காதலியின் தோளில் சாய்ந்த இளைஞரை, பக்கத்தில் இருந்த ஒரு முதியவர் அறிவுரை கூறி கண்டித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக அதிகாலையில் புறப்பட்டதால், அந்த ஜோடி மிகவும் களைப்பாக இருந்திருக்கிறது. காதலன் சோர்வில் தன் காதலியின் தோளில் சாய்ந்து, விளையாட்டாக சில்மிஷம் செய்துள்ளார். அது எங்களுக்கிடையேயான ஒரு சின்ன, இயல்பான தருணம்,” என்று காதலன் ரெடிட்டில் எழுதியுள்ளார். ஆனால், அருகில் இருந்த ஒரு பெரியவர் இந்த சின்ன ரொமான்ஸை ஒரு பெரிய நாடகமாக மாற்றி, இருவருக்கும் “நாகரிகம்” குறித்துப் பாடம் எடுத்திருக்கிறார்.

இப்படிச் செய்யாதீர்கள். உங்களுக்கு நாகரிகம் இல்லையா? இது பொது இடம். உங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லையா? அவர்கள் முன்னிலையில் இப்படிச் செய்வீர்களா?” என்று அந்த பெரியவர் கண்டித்திருக்கிறார். இளைஞன் அமைதியாக விளக்க முயன்றபோது, மற்றொரு பயணி அந்த பெரியவருக்கு ஆதரவாக சேர்ந்து கொண்டு, “வாயை மூடு, சண்டையிடுவதை நிறுத்து” என்று கடிந்து கொண்டிருக்கிறார். தான் சோர்வாக இருந்ததாகவும், எந்தப் பிரச்னையையும் உருவாக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞன் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகவே, பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை பகிர்ந்தனர். பெரும்பாலானோர் இந்த காதலர்களுக்கு ஆதரவாக நின்றனர். சிலர், “பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதை பொறுத்துக்கொள்ளும் இந்தியச் சமூகம், ஏன் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்வதை ஏற்க மறுக்கிறது?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

ஒருவர், சசி தரூரின் பிரபலமான கூற்றை நினைவுபடுத்தி “இந்தியாவில், நீங்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கலாம், ஆனால் பொது இடத்தில் முத்தமிட முடியாது.” என்று பதிவு செய்தார். மற்றொருவர், “இந்தக் கிழவர்களுக்கு இளைஞர்களை விமர்சிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. வயதானவர்கள் என்பதால் தாங்கள் எப்போதும் சரியானவர்கள் என்று நினைக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

உண்மையான சமூகப் பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் இருக்க, பொது இடங்களில் சிறிய அளவிலான ரொமான்ஸ் செய்வதை கூட மக்களை கோபப்படுத்துகிறது என்று பலரும் குறிப்பிட்டனர். இந்த பதிவின் உண்மைத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

சூர்யா ஒரு திரைப்படத்தில் சாலையில் அநாகரீகமாக கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் ஒரு ஜோடியை திட்டி, ‘ரோட்லயே எல்லாம் செஞ்சிட்டா.. வீட்ல போய் என்ன செய்வீங்க.. என்று கண்டிப்பார். அதே பாணியில் தான் மெட்ரோவில் இளம் காதலர்களின் ரொமான்ஸை பெரியவரின் கண்டித்துள்ளார்.