இமேஜ் கிரியேட் செய்ய இனி ChatGPT செல்ல வேண்டாம்.. வாட்ஸ் அப் ஒன்று போதும்..!

வாட்ஸ்அப்பில் ChatGPT வசதி ஏற்கெனவே கிடைத்தாலும், இப்போது ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது! ஆம், இனிமேல் AI மூலம் படங்களை உருவாக்கும் வசதி அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. இது மெட்டா AI-க்கு…

Whatsapp

வாட்ஸ்அப்பில் ChatGPT வசதி ஏற்கெனவே கிடைத்தாலும், இப்போது ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது! ஆம், இனிமேல் AI மூலம் படங்களை உருவாக்கும் வசதி அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. இது மெட்டா AI-க்கு ஒரு நேரடி போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

OpenAI நிறுவனம், வாட்ஸ்அப்பில் கிடைக்கும் இந்த AI பட உருவாக்கும் கருவி, அதன் இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ளதைப் போலவே செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மிகப்பெரிய சிறப்பு, இது முற்றிலும் இலவசம் என்பதுதான்!

1-800-242-8478 என்ற இலவச எண்ணை உங்கள் போனில் சேமித்து, வாட்ஸ்அப்பில் ChatGPT சாட்போட்டை தொடங்கலாம். பிறகு, “விண்வெளியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் படத்தை உருவாக்கு” என்பது போன்ற கட்டளைகளை கொடுத்தால், ChatGPT உங்களுக்கான படத்தை பக்காவாக உருவாக்கி தரும்.

வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருக்கும் நமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு இமேஜ் உருவாக்கி அனுப்ப வேண்டும் என்றால் முன்பு ChatGPT சென்று அதில் இமேஜ் உருவாக்கி அதை டவுன்லோட் செய்து சேமித்து வைத்து அதன் பின் அந்த இமேஜை whatsapp மூலம் அனுப்ப வேண்டிய நிலை இருக்கும்.

ஆனால் தற்போது whatsapp மூலமே நாம் நினைக்கும் இமேஜ்களை உருவாக்கி அப்படியே அனுப்பி கொள்ளலாம் என்பதுதான் இந்த புதிய வசதியின் சிறப்பாகும். நீங்கள் தனியாக ChatGPT சென்று என்னென்ன இமேஜ்களை உருவாக்க நினைக்கிறீர்களோ அதை அப்படியே வாட்ஸ் அப்இல் தற்போது உருவாக்கலாம் என்பது கூடுதல் வசதியாகவும் அதுமட்டுமின்றி இவை அனைத்துமே வாட்ஸ் அப் பயணர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது என்பது ஒரு சிறப்புக்குரியவசதியாகவும்.

மொத்தத்தில் whatsapp இப்போது வெறும் உரையாடல் மற்றும் பைல்களை அனுப்புவதற்கு மட்டுமின்றி இமேஜ்களை உருவாக்கி அனுப்பவும் கூடிய ஒரு தளமாக மாறி உள்ளது வாட்ஸ் அப் பயனர் பயனர்களுக்கு கூடுதல் வசதியாக பார்க்கப்படுகிறது.