40 பெண்களுக்கும் ஒருவர் தான் கணவரா? ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்..!

Published:

பீகார் மாநிலத்தில் தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் 40 பெண்களுக்கும் ஒரே ஒருவர்தான் கணவர் என்ற தகவல் கணக்கெடுப்பு எடுத்த அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 7ஆம் தேதி முதல் கட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்டம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் அமைச்சரவை முடிவு செய்தது என்பதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பின்னர் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு மற்றும் பல வசதிகள் செய்து கொடுக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் என்ற மாவட்டத்தில் 40 பெண்கள் தங்கள் கணவரின் பெயர் ரூப்சந்த் என்று குறிப்பிட்டுள்ளது அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தங்கள் குழந்தைகளுக்கு தந்தை ரூப்சந்த் தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

அது மட்டும் இன்றி ஆதார் அட்டை உள்பட அனைத்து அரசு ஆவணங்களிலும் இந்த 40 பெண்கள் தங்கள் கணவர் பெயர் ரூப்சந்த் சேர்ந்து குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து அரசு அதிகாரிகள் மேலும் விசாரணை செய்த போது அந்த பகுதி சிவப்பு விளக்கு பகுதி என்றும் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் ரூப்சந்த் என்ற கற்பனை பெயரை உருவாக்கி அவரை தங்கள் கணவராகவும் தங்கள் குழந்தைகளுக்கு தந்தையாகவும் வைத்துள்ளனர் என்றும், ரூப்சந்த் என்ற ஒருவர் உண்மையில் இல்லை என்றும் தெரியவந்தது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...