Xiaomi Pad 6 vs OnePlus Pad: இந்த இரண்டில் எது சிறந்தது? ஒரு பார்வை..!

Published:

Xiaomi Pad 6 மற்றும் OnePlus Pad ஆகிய இரண்டும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi கடந்த வாரம் Xiaomi Pad 6 ரூ.30,000க்கு விலையில் அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு அம்சம் கொண்ட இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 870 SoC, 8ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சமாக 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் Xiaomi Pad 6 ஆனது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 33W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 8,840mAh பேட்டரி கொண்டது.

Xiaomi Pad 6 இரண்டு வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. 6ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடல் ரூ. 26,999 என்ற விலையிலும், 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 28,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

அதேபோல் ஒன்பிளஸ் பேட் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மாடல் விலை ரூ.37,999 என்றும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட மாடல் ரூ. 39,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

Xiaomi Pad 6 மாடலின் சில முக்கிய அம்சங்கள்:

Xiaomi Pad 6 ஆனது MIUI 14 உடன் வருகிறது

இதில் 11-இன்ச் 2.8K (1,800×2,880 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே உள்ளது.

Snapdragon 870 SoC, 8GB LPDDR5 ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டது

13-மெகாபிக்சல் கேமரா சென்சார் மற்றும் சதுர வடிவ மாட்யூலில் ஏற்பாடு செய்யப்பட்ட LED ஃபிளாஷ் ஆகியவை உள்ளது. மேலும் இது 105 டிகிரி

256GB வரையிலான மைக்ரோ கார்டு வசதி

6 ப்ளூடூத் 5.2 , 33W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுஆண் 8,840mAh பேட்டரி

எடை 6 490 கிராம்

OnePlus Pad மாடலின் சில முக்கிய அம்சங்கள்:

OnePlus Pad ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது

11.61-இன்ச் (2,000 x 2,800 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே

டால்பி அட்மாஸ் குவாட்-ஸ்பீக்கர்

MediaTek Dimensity 9000 SoC பிராஸசர்

12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1இண்டர்னல் ஸ்டோரேஜ்

3 மெகாபிக்சல் கேமரா

552 கிராம் எடை

புளூடூத் 5.3, ஃபேஸ் அன்லாக் வசதி

9,510mAh பேட்டரி

மேலும் உங்களுக்காக...