என்ன‌ ருசி..! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச்.. செய்வது எப்படி?

Published:

குழந்தைகள் வளர்வதற்கு நிறைய ஆற்றல்கள் தேவை. ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள், கால்சியம், புரதம் என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவுகளை அவர்கள் தினமும் உட்கொள்வது அவசியம். அவர்களுக்கு என ஒரு சத்தான ரெசிபி தான் வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச். வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச் சத்தான உணவு மட்டும் இன்றி சுவையாகவும் பார்ப்பதற்கு சாப்பிட வேண்டும் என்று ஆர்வம் ஏற்படும் வகையிலும் இருக்கக்கூடிய ஒரு உணவாகும்.

sandwich

இந்த வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச் செய்ய தேவையான பொருட்கள்:

  • பிரட் – 4 துண்டுகள்
  • பூண்டு – 7 பற்கள்
  • வெண்ணெய் – 100 கிராம்
  • மோஸ்சரெல்லா சீஸ் – 200 கிராம் 
  • சிவப்பு குடைமிளகாய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை குடைமிளகாய் 1 கப் (பொடியாக நறுக்கியது)
  • வேகவைத்த சோளம் – 1 கப்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 1
  • இத்தாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி
  • சில்லி ஃப்ளேக்ஸ் – 1 1/2 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி – சிறிதளவு

வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச் செய்யும் முறை:

  • ஒரு பாத்திரத்தில் உப்பிடப்படாத வெண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பூண்டினை நன்கு துருவி, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் வேகவைத்த சோளம் பொடியாக நறுக்கிய சிவப்பு மற்றும் பச்சை குடமிளகாய்கள் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
  • மோஸ்சரெல்லா சீஸினை துருவி அதனுடன் இத்தாலியன் சீசனிங், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பிரட் துண்டினை எடுத்து அதனுடன் பூண்டு சேர்த்த வெண்ணெய் கலவையை தடவி அதன் மீது காய்கறி கலவையை சேர்க்கவும் பின்பு சீஸ் கலவையை தூவவும். இப்பொழுது இன்னொரு பிரட்டின் மீது மீண்டும் பூண்டு சேர்க்கப்பட்ட வெண்ணை கலவை தடவி நிரப்பப்பட பிரட்டின் மீது வைத்து மூடவும்.
  • இப்பொழுது இந்த பிரட்டை ஒரு தவாவில் வைத்து குறைவான தீயில் வெண்ணெய் தடவி வைக்கவும் நன்கு பொன்னிறமானதும் மற்றொருபுறம் திருப்பி பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.

இப்பொழுது சுவையான வெஜிடபிள் சீஸ் சாண்ட்விச் தயார்.

சாண்ட்விச் இந்த நிரப்பிகள் (filling) மட்டுமல்லாமல் வேறு சில நிரப்பிகளையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் உங்களுக்காக...