முதல்வர் பயணம் செய்த டிரைவர் இல்லாத காரில் இத்தனை சிறப்பு அம்சங்களா? ஆச்சரிய தகவல்..!

By Bala Siva

Published:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப் பயணமாக சென்ற நிலையில் அங்கு அவர் பிரபல தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அமெரிக்காவில் முதல்வர் முக ஸ்டாலின் டிரைவர் இல்லாத காரில் பயணம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இந்த காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பயணம் செய்த கார் – ஜாகுவார் நிறுவனத்தின் I-Pace எஸ்யூவி கூபே என்ற மாடலை சேர்ந்தது ஆகும். இதுவொரு தானியங்கி எலெக்ட்ரிக் கார் ஆகும்.

செல்ஃப் டிரைவிங் டெக்னாலஜி கொண்ட இந்த காரின் மேல் பகுதியில் ரேடார் கருவி இருப்பதால், அதன்மூலம்  இந்த கார், போக்குவரத்து நெருக்கடி, சிக்னல்கள் ஆகியவற்றை கணிக்கும் திறன் கொண்டது.

இந்தக் காரை சுற்றி மொத்தம் 30 வகையான பெரிமீட்டர் கேமரா  இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. குளிரான காலங்களில் கூட கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் துல்லியமாக இருக்கும் வகையில் சிறப்பு தொழில்நுட்பத்துடன் இந்த கார் இயங்குகிறது.

இந்த காரில் உள்ள பெரிமீட்டர் கேமராக்கள் எதிரே வாகனங்கள் நெருக்கமாக இருந்தால் உடனே தானாக பிரேக் பிடிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டது.