சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?

Published:

சென்னை : தலைநகர் சென்னையில் மெரீனா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கோவில்கள் என எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. மேலும் தனியார் சுற்றுலா தலங்களும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளன. என்னதான் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் என பல இருந்தாலும் குறைந்த செலவில் குழந்தைகள் குதூலிக்கும் இடமாக விளங்கி வருவது சென்னை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள கிண்டி உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா.

தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த உயிரியல் பூங்காவானது சிறுவர்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சிறம்பம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. அடர்ந்த மரங்கள், நீர் நிலைகள், வன விலங்குகள் என ஒரு மினி ஊட்டியாகவே விளங்கும் இந்த சிறுவர் பூங்காவானது தற்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டு அதிக வசதிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இயங்கி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இந்த சிறுவர் பூங்காவைப் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இனி சிகிச்சைக்கு வெளிநாடு போகத் தேவையில்லை.. வந்தாச்சு புது டெக்னாலஜி.. அசத்தும் சீனா..

ஆண்டுதோறும் சுமார் 7-8 லட்சம் பார்வையாளர்களும், ஏராளமான பள்ளி, மாணவ மாணவிகளும் வந்து ரசித்துவிட்டு இனிமையான நிகழ்வுகளை மனதில் சுமந்து செல்லும் இந்த கிண்டி சிறுவர் பூங்கா தற்போது ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பூங்காவில் அதிநவீன நீரிலும், நிலத்திலும் செல்லும் 9வாகனங்கள், சுமார் 2800 ச.மீ. தமிழகத்தில் முதன்முறையாக நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின மையம், வன விலங்குகளைப் பற்றி அறியும் விதமாக எல்.இ.டி திரைகள், நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், சிற்றுண்டிக் கடைகள், செயற்றை நீரூற்று, அழகிய நுழைவு வாயில், செல்ஃபி பாயிண்ட், நிர்வாகக் கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான தனி பாதைகள் என பல அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது இந்த சிறுவர் பூங்கா.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வுடன் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையையும் வெளியிட்டார் ஸ்டாலின்.

மேலும் உங்களுக்காக...