அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம்.. ஏஐ நிறுவன தொழிலதிபர்களுக்கு சீனா எச்சரிக்கை..

  சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சீன அரசு கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி தொழில் நிறுவனமான ஓப்பன்…

china usa

 

சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சீன அரசு கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி தொழில் நிறுவனமான ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளியது சீனாவின் டீப் சீக் என்பது தெரிந்தது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தை பெரிய அளவில் சரிந்தது என்பதும், தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா அமெரிக்காவை முந்தி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சீன அதிபர்  சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் தொழில்நுட்பத் துறையின் முக்கிய தலைவர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீனாவின் ஏ.ஐ மாடல் மற்றும் சந்தையின் மதிப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும், சீனாவின் ஏ.ஐ தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, டீப் சீக் நிறுவனத்தின் உரிமையாளர்  பிப்ரவரி மாதத்தில் பாரிசில் நடைபெற இருந்த ஏ.ஐ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அழைப்பை நிராகரித்தார். அதேபோல், இன்னொரு முக்கிய ஏஐ நிறுவனத்தின் உரிமையாளர்  கடந்த ஆண்டு அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பீஜிங் அறிவுறுத்தலின்படி அந்த பயணத்தை அவர் ரத்து செய்தார்.

சீனாவின் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவுக்கு சென்றால், அங்கு கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் சீனாவிடம் அமெரிக்கா பேரம் பேசுவதற்கான சூழ்நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.